பக்கம்:அமுதவல்லி.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அமுத வல்லி

பிரகாசிக்காமல் இருக்க இயலுமா? தஞ்சாவூரிலே கீழவாசலில் இருந்த உயர் ரிட்ரேடிங் கம்பெனி ஒன்றில் அவனது படிப்பும் புத்தி சத்தியும் வாங்கிக் கொடுத்த மானேஜர் பதவி அவன் குடும்பத்தை அங்கே ராஜ போகமாகத் தான் வைத்துப் பேணியது. மானம் பேணி,'கெளரவம் காத்து வந்தான் அவன். அவனைப் பொறுத்த மட்டில் மிகமிக எளிமை வாழ்வு மேற்கொண்டான். அவனுக்குத் தக்க பிணைஇணை தான் மீனாட்சி. கட்டுச் செட்டாகத் தான் குடும்பம் ஓடியது காலமும் ஓடியது. காமராஜ் பிறந்தான். அப்பால் இந்த அமுதா ஜனனம். அஞ்சல் நிலையச் சேமிப்பு கரைந்தது. கடன், கைமாற்று என்கிற வியாபாரம் அவர்கள் வரை அனுபவிக்காத சோதிப்புகள் தான். ஆனால் குழந்தைகளைப் பொறுத்த அளவில் அளவிலா ஆனந்தம் அனுபவித்தார்கள் அவர்களின் நடைமுறை வாழ்வு கற்பித்த அனுபவங்கள். அந்த இரண்டு குழந்தைச் செல்வங்களோடு அமைதி காணப்போதித் தன சோதனை இல்லையேல் வாழ்க்கை ருசிக்காதோ?

ஒருநாள் டயர் கம்பெனி முதலாளி சுப்பையாவை

அழைத்தார். அப்போது அவன் மாத்திரம் தான் கணக்கு எழுதிக் கொண்டிருந்தான். சென்றான் மது விலக்கு நிறுத்தி வைக்கப்பட்ட நாள் தொட்டு அம்மாதிரியான இராக் காலங்களிலே சுப்பையா மிகவும் எச்சரிக்கையோடு இருப்பான். ஏனென்றால் முதலாளியைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியும். விதி தளர்த்தப்படும் போது, அந்த விதியையே சோதித்துப் பார்க்க முனைவதும் மனித இயல்பு தானோ? எஜமானர் காதோடு காதாக,

சுப்பையா. பஸ் ஸ்டாண்ட் வரை போயிட்டு வந்திடுங்க, இருபது ரூபாய் எடுத்திட்டுப் போங்க"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/50&oldid=1375420" இருந்து மீள்விக்கப்பட்டது