பக்கம்:அமுதவல்லி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 50 __________________________________

தெரிந்திருந்தால், சாயா குடிக்காமல் இருந்திருப்பான் அவன். தின்பதற்கு ஏதாவது வாங்கியிருப்பான். அப்படி எத்தனையோ முறை செய்தும் இருக் கிறான் அவன். பசி வயிற்றைக் கிள்ளியது! இருமல் உயிரை வாங்கியது!...

   என்னவோ ஒரு நினைப்புடன் மேலத் திண்ணைக் கொடியில் கிடந்த ஒரு பழஞ்சட்டையை எடுத்து உதறினான், சுப்பையா. ஒரேயொரு க்ளாக்லோ பிஸ்கட் விழுந்தது. என்றோ ஒரு தினம் வேண்டாம்’ என்று அமுதாவினால் நிராகரிக்கப்பட்ட அந்த ரொட்டி இப்போது ஆபத்துக்குக் கை கொடுத் தது; சுவை கொடுத்தது!
  “அத்தான்! பிள்ளை குட்டிங்கன்னு ஆனப்புறம், தாம் நிதமும் குறைந்த பட்சம் பத்துப் பத்துக் காசாகவேச்சும் நம்மோட எதிர்காலக் குடும்பப் பாது காப்புக்கென்று சேமிச்சகச் சேர்த்து வைக்கப் பழகிக்கிட்டு வந்தால், ஆபத்துச் சமயங்களிலே எவ்வளவோ உபயோகப் படுமுங்க!’ என்பாளே மீனாட்சி அடிக்கடி!
  மீனாட்சிக் குத்தான் எத்துணை தீர்க்க தரிசனம்: அவன் சமர்த்து யாருக்கு வரும்?
  அவள் புத்திப்படி அவன் சேர்த்து வைத் திருந்ததெல்லாம் தான் அவ னுடைய பாழாப் போன நோய்க்கு அர்ப்பணமாகி விட்டதே!-இல்லையேல் அவன் மறு பிறவி கொண்டிருக்க முடிந்திருக்காது. சுப்பையா மட்டும் பைத்தியக்காரனா, என்ன...?
 ‘அமுதா, நாளைக்கு நான் வேலை தேடப் புறப்படப்போறேன். திரும்பினதும் முன் மாதிரி உனக்கு தின்கிறதுக்கு ஏராளமான முந்திரி பருப்பு, பிஸ்கட், ஆப்பிள் எல்லாம் வாங்கிட்டு வாரேம்மா!'
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/53&oldid=1378256" இலிருந்து மீள்விக்கப்பட்டது