பக்கம்:அமுதவல்லி.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 அமுத வல்லி _________________________________

  "இன்னிக்கு?" என்று அடம் பிடித்தாள் குழந்தை வெறுங்கையை விரித்தாள். தின்ற ரொட்டியின் சுவடே தெரியவில்லை.
  "அம்மா திரும்பட்டும். இப்பவே நான் ரோட்டுக்குப் போய் வாங்கி யாரேன்!"
 "பக்கத்து வீட்டு பாமா மட்டும் சதா ரொட்டி தின்றாளே?”
 "அவங்க புதுப் பணக்காரங்க"
   "நாம்ப மட்டும் பழைய பணக் காரங்க இல்லியோ?”
   அவனால் சிரிக்காமல் இருக்கக் கூட வில்லை. "ஊம்! நாம் பழைய பணக்காரங்கதானம்மா!"
   உண்மைதான் !
   சுப்பையா பெருங்காயம் வைத்த பாண்டம் தான் அதற்குச் சாட்சியம் சொல்லும் இந்த வீடு நிலைத்திருக்க வேண்டும்.
   “ஆத்தா!...”
   மறு பஸ்ஸில்தான் 'மெயில்' வந்திருக்கிறது.
   சுப்பையா ஆவலோடு எதிர் நோக்கித் தவமிருந்த தஞ்சாவூர்த் தபால் வந்து விட்டது. அவன் எதிர்பார்த்த பிரகாரமே விஷயமும் பழம்தான் மீனாட்சி சென்ற வாரம் சொன்ன சோதிடம் நிஜமாகத் தான் இருக்கும் போலிருக்கிறது. குரு பெயர்ந்து விட்டானாம்.
   சந்தோஷம் பிடிபடவில்லை. துன்பம் மட்டும் பிடிபட்டதா? ஊஹூம்! மனத்துக்கு உகந்தவளிடம். மகிழ்வுச் சேதியைச் சொல்ல நெகிழ்ச்சி பின்னிக்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/54&oldid=1378280" இருந்து மீள்விக்கப்பட்டது