பக்கம்:அமுதவல்லி.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 53 __________________________________

பின்னிக் காத்து நின்றான் அவன். நடைக்கும் வெளி வாசலுக்குமாக நடை பயின்றான். இடுப்பு வேட்டி 'பட்'டென்றது. எட்டு முழ வேஷ்டியைக் கண்டு இவ்வளவு நாள் தாக்குப் பிடித்தது. காந்திஜி என்ன, ஒளரங்கசீப் என்ன இவங்களெல்லாரும் தங்கள் கிழிசல்களை தாங்களே தானாக்கும் தைத்துக் கொண்டார்களாம்!” என்ற பீடிகையுடன் அவள் அவனுடைய வேட்டியைத் தைத்துக் கொடுக்க அதற்கு அவன் சமத் காரமாக, ‘மீனாட்சி நான் தைத் தால் என்ன, நீ ைதத்தால் என்ன? எல்லாம் ஒன்றுதானே?’ என்று ஒரு போடு போடவில்லையா?

  தஞ்சாவூரில் பழ. மு. லேவா தேவிக் கடையில் வேலைக்குச் சேர்ந்ததும், முதலில் பிள்ளைகளுக்கு வேண்டிய தின்பண்டங்கள், துணிமணிகள் வாங்கியாக வேண்டும். பிறகு ஒரு வேட்டி, சட்டை வாங்க வேண்டும். ஊஹாம், முதலில் மீனாட்சிக்கு வாயில் சேலை வாங்க வேண்டும். மறுபடியும் தஞ்சையில், குடித்தனம் வைக்க வேண்டும். அங்கே வெள்ளைக்கு முன் போல வேளா வேளைக்குப் பால் வார்க்க வேண்டும்! ...
  “அத்தான்!”
  அதோ, மீனாட்சி வந்துவிட்டாள். அவலம் மிகுந்த துயரங்களை மாண்புமிக்க சகிப்புத் தன்மையோடு தன்னுடைய பற்களுக்கிடையே அடக்கிய வண்ணம், புன்னகை மென் மலரச் செவ்வதரங்களிலே துரவிய வளாக வந்து நின்றாள்; மீனாட்சி, நெற்றிப் பொட்டு எவ்வளவு பொலிவுடன் விளங்குகிறது!
  "வா, மீனாட்சி" என்று இன்முகம் சுாட்டி முகமன் மொழிந்தான் சுப்பையா. உயிரின் மறு பாதியை உறுத்துப் பார்த்த அவனுக்கு நெஞ்சை அடைப்பது போலிருந்தது. வீசின கையும் வெறுங்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/55&oldid=1378293" இருந்து மீள்விக்கப்பட்டது