பக்கம்:அமுதவல்லி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 அமுத வல்லி


கையுமாக நிற்கிறாள்! பாவம், அடுப்பு எப்போது புகையும்? - எப்படிப் புகையும் ? காமராஜ் வந்து நிற்கப் போகிறானே? அவன் இருந்தால் சாப்பிடுவான்; இருப்பதைச் சாப்பிடுவான். ஆனால் அமுதாக் குட்டி விதரனை தெரியாத சுட்டி ஆயிற்றே! பசி பொறுக்கமாட்டாளே என் ராஜாத்தி?

   "அத்தாச்சி வீட்டிலேயேயும் அரிசி தட்டுப் பாடாம்" என்றாள் மீனாட்சி. "அத்தான், உங்களுக்குப் பசிக்குமே?" என்றாள் முந்தானை கன்னங்களுக்கு ஓடியது.
   "உனக்கு மட்டும் பசிக்காதா? ராத் திரிகூட நீ  சாப்பிடலையே? எனக்குத் தெரியும், மீனாட்சி. காலம்பற பிள்ளைங்களுக்கு வேணும்னு நீ ராத் திரி சாப்பிடாம இருந்திருக்கே. கஞ்சிப் பானை சொல்லிட்டுது!" நா தழு தழுத்தது.
   "மனசு சரியில்லைன்னா, எதுவுமே மட்டுப்பட மாட்டேங்கிறது. எங்கேயோ கொஞ்சம் அரிசிக் குறுணை வச்சதாக ஞாபகம்" என்று தாய் வீட்டுக்கு விரைந்தாள் வாழ்வின் துணை!
   அப்போது, யாரோ மீனாட்சியைப் பெயரிட்டுக் கூப்பிட்டார்கள்.
   எட்டிப் பார்வையிட்டான்.சுப்பையா.
   கீழத் தெருக் காமாட்சிப் பாட்டி வந்திருக்கிறாள். உப்பு புளி கடன் வேண்டியதாக இருக்கலாம்.
   குரல் கேட்டு மீனாட்சி திரும்பினாள். “ஒரு ரூபாய்க்கு அவசரமாய் புளி வேணும். இந்தா ரூபா" என்று சொல்லி ஒரு ரூபாய்த் தாளை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/56&oldid=1376140" இலிருந்து மீள்விக்கப்பட்டது