பக்கம்:அமுதவல்லி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

 வெளியானது; வெளிப்படுத்தப்பட்டது!— பாருக்குள்ளே நல்ல நாடான அருமைப் பாரதம் ஆனந்தச் சுதந்திரம் அடைந்த அப்புனித நன்னாளிலே, எழுத்தாளர் ஆன நான் உண்மையிலேயே பாக்கியவான் தான் !

இப்போது, நடப்பு உண்மை ஒன்றினையும் சொல்லிவிட வேண்டும்! நாடு விடுதலை பெற்ற நேரத்திலே, நான் அடிமை ஆனேன் !— நான் என்னுடைய எழுத்துக்கு அடிமையானேன்!

எண்ணிப் பார்க்கின்றேன்! — நான் ஏன் எழுத்தாளன் ஆனேன்?—எனக்குத் தெரிந்தவிடை விதியின் பிழை என்பதுதான்! — ஒ சிருஷ்டியின் பரம ரகசியத்தைச் சூட்சுமமாகத் தெரிந்து கொண்ட நான் உண்மையாகவே பாக்கியவான்தானே?

அந்நாளிலே, நான் எழுதிய ‘கரகம்’ என்னும் முதற் கதையைச் சுதேசமித்திரன் ஞாயிறு மலரில் வெளியிட்டவர் சிரஞ்சீவிப் புகழ் கொண்ட நாவலாசிரியர் அமரர் சாண்டில்யன் !— இங்கே ஒர் உண்மையையும் சொல்ல வேண்டும்!—நான் எழுதிய முதல் கதையே அச்சுவடிவம் பெற்று விட்டது!

என் தாய்வீடு: ‘பொன்னி’!—அங்கே தான், என் முதல் நூலாகக் ‘கடல் முத்து’ வெளியானது; அந்தக் ‘கடல் முத்து’ அண்மையில், சரியாக நாற்பதாண்டுகள் கழித்து, மீண்டும் வெளிப்படுத்தப்பட்டது. கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் அருள் திரு டாக்டர் தயானந்தன் ஃபிரான்—சிஸ் அவர்களது அன்பு பெரிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/6&oldid=1027314" இலிருந்து மீள்விக்கப்பட்டது