பக்கம்:அமுதவல்லி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூ வை எஸ். ஆறுமுகம் 59


   விடை பெற்றார்கள், வந்தவர்கள்!
   இப்போது சுப்பையா நழுவிக் கிடந்த பையை நோக்கினான். அமைதி கனிந்த திருஷ்டி!
   மீனாட்சி மனம் விட்டுச் சிரித்தாள். "நாட்டுப் பாதுகாப்புக்கு நம்மாலான பங்கையும் நாம் செலுத்திட்ட வரைக்கும் நமக்கும் நிம்மதி தானுங்க, அத்தான்!. இந்தச் சமயத்திலே நம்ப வீட்டு டிரான்ஸிஸ்டர் நம்மகிட்டே தங்கியிருந்தாலாவது, கொஞ்ச நாழி பாட்டுக் கேட்டுக் கிட்டு பசியை மறந் திருப்பாங்க பிள்ளைங்க!... குழந்தைகளை வச்சுக்கிட்டு நீங்க கதை ஏதாச்சும் சொல்லிக்கிட்டு இருங்க, அத்தான்! நான் உள்ளே போய் அரிசிக்குறுணை இருக்குதான்னு சோதனை போட்டுட்டு ஓடியாரேன்!” என்று கூறி விட்டு உள்ளே விரைந்தாள் குடும்பத் தலைவி.
   அந்தச் சமயத்திலே...!
   தடாலென்று என்னவோ தரையில் விழுந்து நொறுங்கின அரவம் பயங்கரமாக ஒலி பரப்பியது.
   அரவம் கண்ட பாங்கில் கதி கலங்கி உள்ளே ஓடினான் சுப்பையா.
   சாதுவாக நின்ற வெள்ளைப் பூனையைச் சுற்றி மண் சில்லுகள் ஒட்டுச் சிதறல்கள் காட்சியளித்தன. அவற்றைச் சூழ்ந்து கிடந்தன பலவகையான நாணயங்கள்!
   ஆஹா!...
  “அத்தான் ஆபத்து சம்பத்துக்கு உதவுமேயென்று செலவுகளைச் சிக்கனம் பண்ணி மிச்சம் பிடிச்ச காசுகளை உண்டிக் கலயத்திலே அப்போ
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/61&oldid=1376383" இலிருந்து மீள்விக்கப்பட்டது