பக்கம்:அமுதவல்லி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 3. ஒரு மோகினியின் கதை


   “அவள் தாசி. தாசிக்குப் பெயர் இல்லாமல் இருக்குமா? பெயர்: மோஹினி. ஆம்! மோஹினியே தான்! மோகம் நிறைந்து. கிளைத்து, முகிழ்த்துக் கிடந்த அவளுடைய கண்களில்-கன்னக் கதுப்புகளில் நெஞ்சு வெளியில் நான் போதை கொண்டு, 'அவளே சதம்’ என்று அதனால் தான் விழுந்து கிடந்தேனோ? நான் ஏன் அப்படி ஆனேன்? முன்னைப் பழவினையின் மூட்டம் விலகி. இப்படியொரு சம்பவம் நிகழ்ந்து விட்டிருக்கிறதே? ஆமாம்; அப்படித்தான் விதித்திருக்க வேண்டும்! இல்லையென்றால், அவள் மோஹினி என்ற பெயருடன் என் உடல், பொருள், ஆவி ஆகிய சகலத்தையுமே சுவீகரித்துக் கொண்டு விட்டிருப்பாளா?... மெய்தான்! அவள் மோஹினியே தான்! மோஹினி என்றால், சாதாரண மோஹினியா, என்ன? பத்மாசூரனை அழிக்க திருமால் எடுத்த அவதாரத்துக்குப் பெயர் கூட மோஹினி அவதாரம் தானே?
   அவள் தெய்வமா?
   அவ்வாறென்றால், நான் அரக்கனா?
   ஊஹூம்!
   அவள் தான் அரக்கி!... அவள் தான் பிசாசு!... மோஹினியா அவள்?...பேய் பெண் பேய்!...”
   என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அல்லவா? அதே போலத் தான். அந்த மனிதரும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/63&oldid=1376389" இலிருந்து மீள்விக்கப்பட்டது