பக்கம்:அமுதவல்லி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 63



   திருக்கோகரணத்தில் தான் “தசரா விழாவிற்கு முத்தாய்ப்புக் கிடைக்கும். மன்னர் பிரான் அம்பெய்து முடிந்து, அன்னை பிரஹதாம்பாளின் தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பியதும், சதங்கைகளின் காதற்பண்ணுக்கு தம்முடைய இளமை மனம் தஞ்சமடைந்த விந்தையினை அவரது உள்ளத்தின் உணர்வு எடுத்துச் சொல்லக் கேட்டார். அவரையும் அறியாமல், அவரது கால்கள் வழி நடந்து முன்னேறின. கோயில் நடன மண்டபத்தில் ஆடலழகியைக் கண்டார். மோஹினி என்பது அவள் பெயரென்பதையும் கேட்டுக்கொண்டார். திரும்பி விட்டார் எப்படித் திரும்பினார்? அவளது நல்லெண்ணத்தைச் சுமந்த பெருமிதத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டு தான் திரும்பினார் மணிகண்டன்.
   அவரைப் பற்றிய காதற் விளையாட்டுகளுக்கு முன் னுரை வேண்டுமானால், அவரிடமிருந்து நான் பெற்றுக் கொண்ட அந்தக் காதற் கடிதத்தை நீங்களும் பார்த்து விடுவதுதான் உசிதமாகும்.
   "உயிருக்கு உயிராகிவிட்ட மோஹினிக்கு மணிகண்டன் எழுதுவதாவது:
   உபயஷேமம்.
   இப்பவும், உன்னைப் பார்த்தது முதலாக, எனக்கு என் மனசானது வசம் இழந்து தவிக்கிறது: தவியாய்த் தவிக்கின்றது.
   ஆடுதுறைப்பண்ணை என்றால், நண்டு சுண்டு கூட அறியவேண்டும். அப்படி ஒரு மகத்துவம் எங்கள் குடும்பத்துக்கு. இது பாரம்பரிய ரீதியான ஒரு செல்வாக்கு. இந்தச் செல்வாக்குக்கு உள்ள சகலவித
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/65&oldid=1376435" இலிருந்து மீள்விக்கப்பட்டது