பக்கம்:அமுதவல்லி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 அமுத வல்லி

நின்றாள் அவள். அவனுடைய சரமாரியான பேச்சு வார்த்தைகள் தேனில் வீழ்ந்த ஈயின் நிலைக்கு நேராக இன்பத் தவிப்பில் இருந்தன.

“எங்கள் குலத்தில் இந்தப் பழக்கம் கிடையாது. ஆனால் நான் இம்முறையை கைக் கொள்ளுகிறேன். நான் புதுப்பூ. என் தூய்மையைப் பற்றி தாங்கள் அறியவேண்டும். இன்று உங்கள் வாக்குப் பிரகாரம் வரவில்லையென்றால், என் புனிதம் அழிந்துபட்டிருக்கும். என்னுடைய பதினான்கு நாள் கன்னி நோன்பு இன்றிரவோடு கழிகிறது. நோன்பு முடிந்ததும், அம்பலவாணனின் சந்நிதியை மன சில் இருத்திக் கொண்டு ஆடுவேன். நீங்களும் இருக்க வேண்டும். நீங்கள் மன நிம்மதியுடன் இருக்கலாம். என்னை வளர்த்த மாமாவிடம் எல்லாச் சமாசாரத்தையும் சொன்னேன். உங்கள் தபாலையும் காண்பித்தேன். எங்கள் வழக்கப்படி, நான் 'பொட்டு' கட்டிக் கொள்ள விரும்பாத நிலையை பல நாள் முன் னிருந்தே கவனித்து வருபவர் என் மாமா. ஆகவே, இப்போது என் மனசுக்கு ஏற்றபடி சம்பவித் திருப் பதிலிருந்து, இது ஏதோ தெய்வானுகூலமாகவே இருக்க வேண்டுமென்று கருதுகிறார். இன்றிரவு நீங்கள் இங்கேயேதான் தங்கவேண்டும்!”

இவ்வாறு அவள் மொழி பறித்து, விழி பதித்துச் சொல்லிய சடுதியுடன், ஓவல் கொண்டு வந்தாள். அவன் கோப்பையைக் கை தூக்கி வாங்கிக் கொண் டான். அப்போது அந்த ஈ ஓவல் கோப்பையைச் சதமடையுமென்று அவன் எப்படி அனுமானம் செய் திருப்பான், பாவம்?

‘ஆஹா மோகினி என்ற பெயர் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! ஆசையோடு அவள் தந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/68&oldid=1375291" இலிருந்து மீள்விக்கப்பட்டது