பக்கம்:அமுதவல்லி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 71

தாழ்த்திக் கொண்ட போது, அவள் கையில் கடிதமொன்று தவழக் கண்டேன்.

“இந்த ஓவியனும் சுத்தப் பைத்தியமோ?" என்ற சொற்கள் துலாம்பரமாகக் கேட்டன.

நெருப்புச் சுட்டது போலிருந்தது அவனுக்கு: மயங்கி விழுந்த அந்தக் கலைஞனைப் பற்றிக் கருதி, அவனுக்காக அனுதாபப்படும் நிலையிலா மணிகண்டன் இருந்தான்?

"மணிகண்டன், உங்களுக்குப் பழைய புராணம் நினைவிருக்குமா? சீதை தன் கற்பை உலகுக்கு உணர்த்த தீக்குளித்தாளல்லவா? அது போல, உங்கள் புனிதத்தை என் முன் நிரூபிக்க, நான் அமைக்கும் சோதனைக்கு நீங்கள் உட்பட வேண்டும்: அதோ பாருங்கள், அழகர்கள் பட்டாளத்தை!...” என்று கருவம் இழையோட, வீரப் பெரு மிதத்துடன் சொன்னாள் மோஹினி.

சித்தம் குலைந்தான் மணிகண்டன்.

ஐந்தாறு புதுக் கார்கள் வாசல் முகப்பின் நிழலில் வந்து நின்று ஓய்வு பெறலாயின!

"திருக்கோகர்ணத் தெய்வத்தின் கழலடிகளே சதம் என்று தஞ்சம் அடைந்து கிடந்தேன் நான். ஊர்-உலகம் எதுவுமே எனக்கு மட்டுப்பட மறுத்தது. என்னுடைய வாழ்வும் வளமும் மோஹினிதான் என்று கோட்டை கட்டியிருந்தேன். பைத்தியக்காரன் நான். என்னிடம் தஞ்சம் புகுந்திருக்கின்ற சேமநிதி முழுவதும் தான் என்னைப் பைத்தியக்காரனென ஊருக்கு அம்பலத்திவிட்டது வேண்டும், எனக்கு இன்னும் வேண்டும்!... மை விழி மாதிடம் நான் மையல் கொண்ட மாதிரியாகவே, அந்தத் தையலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/73&oldid=1376596" இலிருந்து மீள்விக்கப்பட்டது