72
அமுதவல்லி
என் பேரில் காதல் கொண்டிருக்க வேண்டுமென்று நான் எண்ணினேன்; இறுமாந்தேன்; எக்களித்தேன்; ஏகாந்தேன்.
கடைசியில், என்னுள் பிறந்த அகந்தை என்னையே 'துவம்சம்' செய்துவிடத் துடித்துக் கொண்டிருக்கிறதே! என் துடிப்பை துடிப்பின் உயிர்ப்பை உயிர்ப்பின் பொருளை நான் அறிந்து அலறிப் புலம்புகிறேனே. உன் செவிகளில் இவை கரை சேரவில்லையா, தாயே?
அவள் தாசி. நிரூபித்து விட்டாள்.
கோவலன் - மாதவி கதையை நான் படித்திருக்கவில்லை யென்றாலும், அவர்களது கதையை நாடக மேடையில் கண்டு களித்திருக்கிறேனே? ஆமாம்; அந்தக் களிப்புத்தான் போதையாக மாறி விட்டது. மாதவியைப் பொறுத்த அளவில் அவளது போதையில் போதம் அவிழ்ந்த தாம். சொல்லக் கேட்டது உண்டு. ஆனால், இந்த மோஹினி யார்?...
நான் அவளை ஆளவேண்டுமென்று கனாக் கண்டேன். இதோ, அவளே இப்பொழுது என்னை ஆண்டு கொண்டிருப்பது போதாதென்று என்னை அழித்து. என் அழிவில் அவள் தனக்குகந்த புதுச் சரித்திரத்தைச் சமைத்துவிடக் காத்திருக்கிறாளே?...
தாயே! நீ எங்கு இருக்கிறாய்?...
என்னவோ, எனக்கு இந்த மோஹினியின் இருப்பிடக்கூட புலப்படக் காணோமே?...
காதல், காதல் என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்களே, காதல் என்றால் என்ன அர்த்தமென்று உங்களில் யாருக்காவது தெரியுமோ?