பூவை எஸ். ஆறுமுகம்
73
எனக்குக் 'காதல்' என்கிற இந்த வார்த்தை தான் பழக்கமே தவிர, காதலின் உருவத்தையோ, இல்லை, காதலின் உள்ளத்தையோ அறிந்தவன் அல்லன்...!
காதல் எனில், சித்த பேத நிலை சேமித்துக் கொண்டிருக்கும் மூலதனம்!
கற்பனையின் அடி மனத்தில் விடிகின்ற தெய்வீக சக்திக்கும் பெயர் காதல்தானாம்:
மனக் கிறுக்கின் பிணவாடையின் நெடுமூச்சு உதிர்க்கும் முன்னைப் பழவினையின் விட்டகுறை - தொட்ட குறையின் விடுபடமுடியாத ஒரு வகையான சலன புத்தியே காதல்!
காதல், காதல், காதல்!
காதல் இன்றேல் சாதல்!
காதலாம்..! சாதலாம்...!
சே
உலகம் கேடு கெட்டது!
உலகத்தைச் சொல்ல நான் யார்?
ஒன்றை மட்டும் சொல்லுவேன்.இந்த மணிகண்டன் இருக்கிறான் பாருங்கள், அவன் சுத்தப் பைத்தியக்காரன்.
அவன் அவளைக் காதலித்திருக்கக் கூடாது.
பாத்திரமறிந்து பிச்சை ஏற்கத் தவறி விட்டான் அவன்.
உண்மையாகவே, அவன் அவள்பால் காதல் வசப்பட்டிருந்தால், காதல் தோற்ற சடுதியிலேயே செத்து மடிந்...
அ-5