பக்கம்:அமுதவல்லி.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 75

இல்லை; என் உயிருக்கு நான் கைப்பிடித்திருக்கும் இந்தத் தூரிகைதான் உயிர். ஆனால் என் மனமோ, ஆடற் கலைக்குப் பெருமை தேடித் தரவல்ல இந்தப் பொற்பதுமை மோஹினியைத் தான் என்னுடைய தூரிகையாகக் கொள்கிறது. இவள் இல்லையேல் என் வாழ்வு இல்லை. ஆனால், இவளோ, நான் இணைந்தால், தனக்கு வாழ்வு சித்திக்காதென்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள். பெண்ணுக்குரிய கற்பு நிலை ஆணுக்கும் உரித்தானது என்பதை தான் அறிவேன். என் கலையே இப்போது என் புனிதத்துக்கு ஊறு செய்துவிட்டது. அவள் என்னை ஐயப்படுகிறாள்! விசாகத் திருநாளன்று ஒருமுறை மோஹினிப் பாவையின் மோகம் முகிழ்த்த நாட்டியத்தை ரசித்தேன். விளைந்தது வினை. அதுவே எனக்கு வாய்த்த கால வினையா, ஐயா?...நான் இனிமேல் அழிந்து பட்டவன் தான். அட்டியில்லை; என் கன்னங்களில் பட்ட அவளது தெய்வ மணிக்கரங்களின் இன்பஸ்பரீசம் பதித்த தழும்புதான் எனக்குத் தேறுதல் சொல்ல வல்லது; நான் வருகிறேன். தான் உங்களிடமிருந்து விலகிச் சென்றவுடன், இந்தத் தபாலை உங்கள் பக்கம் நெருக்கிக் கொள்ளுங்கள்!”

கட்டறுத்துக் கொண்டு, காடு மேடு தெரியாமல் திட்டுடைத்து, கரை அரித்துப் பாயுமே ஆடி வெள்ளம், அதை ஞாபகப்படுத்தக்கூடிய வகையில் அவனது நேத்திரங்கள் புனல் கக்கின.

“அன்பின் ஒவ்வொரு செய்கையும் வாழ்வுக்கு மகிழ்வையே கொணரும்!’ - வாழ்வியலைக் கற்றுத் தேர்ந்த தத்துவஞானி விவேகானந்தர். உங்களுக்கும் தெரிந்திருக்கவேண்டும். அவரது தங்கமான உதாரணம் இது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/77&oldid=1376619" இருந்து மீள்விக்கப்பட்டது