பக்கம்:அமுதவல்லி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 அமுதவல்லி

 என்னை ஒருசிலர் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறார்கள். அவர்களது அறியாமைக்காக தான் வருந்துவதை விடுத்து, அவர்களுடைய மதி தப்பிய செயல்களுக்காகப் பழி வாங்க ஒப்புவது கிடையாது இந்தப் பேனாவைப் பிடிக்கும் வேளை களில் நான் என் சொந்த விருப்பு வெறுப்புக்களை மூட்டைகட்டி வைத்துவிட விழைபவன். ஒரு சம்பவம் நினைவுக்கு வழி திறக்கிறது. நண்பர் ஒருவர்: எழுத்தாளர்தான், நிரம்ப உதவியிருக்கிறேன் நான். 

ஒருமுறை, பெரிய நாவல். ஒன்றைக் கொடுத்தார். புகழ்ப்புராணம் பாடவேண்டுமென்று தனது பண் ணினார். இவர் மாதிரி ஆயிரம் பேர் வழிகளை இந்தப் பத்து ஆண்டுகளில் பார்த் திருக்கிறேனே? ஒப்பு வேனா நான்? குறைகளை எழுதினேன். விமர்சனத்தில் சூடு பறந்தது, இதைக் கண்டதும், செய்ந்நன்றி மறந்து, என்னை கன்னாபின்னா வென்று திட்டிக் கடிதம் போட்டார். பிறரை மட்டந்தட்டி, அதன் ஏணிப்படிகளிலே உச்சியில் ஏறிக் குந்தக் கனவு காணுபவர், என்னைக் காட்டிலும் அனுபவப்பட்ட ஆசிரியர்களைப் பற்றி அவதூறு மொழிந்திருக்கிறாராம்: சுபரூபம் ஒரு நாளைக்கு வேஷம் கலைத்துவிடாமல் தப்பாது என்ற கார்லைல் வாசகம் ரொம்பப் பொருத்தம், அவர் திருந்த இடைவேளை நல்கினேன். கடைசியில் நானே அவரைத் திருத்தினேன். ஏணியை உதைத்துவிட எண்ணினால், முடியுமா? என் நல்ல மனத்தை மனச்சாட்சியையே தெய்வமாகக் கருதிக் கைதொழும் பழக்கமுடைய என்னை அவர் புரிந்து கொள்ள மெய்யாகவே தவம் இருக்க வேண்டும்!. பாவம்...!

இப்படியிருக்கையில், இந்த நல்லிதயக் கலைஞருக்கு ஆபத்துக்கு உதவாமல் இருப்பேனா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/78&oldid=1375908" இலிருந்து மீள்விக்கப்பட்டது