பக்கம்:அமுதவல்லி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் . 77

 முதலில் மோஹினியைச் சந்தித்து, அவளது உள்ளக் கிடக்கையைப் படித்தறிந்து கொள்தாக அவனுக்கு அமைதி மொழி சொல்லி விடை கொடுத் தேன்., 
பாரதிக்கு எல்லாம் தெரியும். அவர் பாடுகிறார்: 

‘ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு அச்சம் உண்டோடா?...

இந்த வரியில் உலக தத்துவமே முடங்கிக் கிடக்கிறது. இவ்வுண்மையை இந்தச் சைந்திரீகன் அறிந்திட அவனுக்கு வயது போதாதே?

மூப்புப் பழுத்த நேரம், அடிக்கடி படுத்து விடுகிறேன். உடம்பைப் பழிவாங்கி உள்ளத்தால் உழைத்துப் பிழைத்த என்னை, இப்போது அதே உடம்பு: பழிக்குப் பழி வாங்கி, என் உள்ளத்தை அயர்வுறச் செய்து விட்டது.

சுந்தரன் போய் விட்டான். அதாவது, என்னை விட்டு விலகிவிட்டான். அவன் கொடுத்த கடிதம் என்னுடனே தங்கிவிட்டது. நான் கொடுத்த வாக்கை அவனுடன் அனுப்பி விடுவேனா? கடிதத் தாளைப் புரட்டினேன். இது என்ன தொல்லை? கோமான் வீட்டுத் திருக்குமரன் மணி கண்டனின் கடிதம் அல்லவா இது? நெஞ்சை ஒடுக்கும் பயங்கரக் கடிதமாக அல்லவா இருக்கிறது? மணிகண்டனா இவ்வாறு செய்திருப்பான்?

முடிவை வைத்து ஆரம்பத்தை உண்டாக்குகிறவன் நான். இவன் ஆரம்பத்திலேயே முடிவை உண்டாக்கி விடுவானோ?.

“போர்க்களத்தில் அதிகாரத்துக்காகச் சண்டை நடக்கின்றது. வாழ்க்கைகூட யுத்தகளம்தான்!.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/79&oldid=1375921" இலிருந்து மீள்விக்கப்பட்டது