பக்கம்:அமுதவல்லி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 78 அமுதவல்லி

இங்கே ஆசைக்காகப் போராட்டம் நிகழ்கிறது. ஆசைக்கோர் அளவில்லை யென்கிறார்கள். உண்மை தான். நான் மோஹினியின் அழகில் ஆசை வைத்தேன். அதற்காகத் தான் இப்படிப்பட்ட போருக்கும் போராட்டத்துக்கும் ஊடே நான் அல்லாட வேண்டியிருக்கிறதா? இந்தச் சூட்சுமம் எதையும் நான் கிரகிக்க இயலாதவனாக இருக்கிறேன். எல்லோருக்குமே வாழ்க்கை புரிந்து விடுகிறதா, என்ன?

மோஹினியின் மேதாவிலாசம் ஒருபுறம் இருக்கட்டும். அவளது ஈடில்லா எழிலும், எழில் பொதிந்த இனிமையும் அல்லவா என்னை தேனில் விழுந்த ஈயாக ஆக்கித் தொலைத் திருக்கிறது? ஈக்காவது தேன் சுவையைத் துளியாவது சுவைக்க முடிந்திருக்கும். அந்தச் சுவை இன்பத்தின் பெறுமதியுடன் தன் வாழ்வையே குலைத்துக் கொள்ளக் கூடிய ஒரு துணிச்சல், அல்லது பக்குவம் அதற்கு இயற்கையிலேயே உண்டாக்கி விடும் போலிருக்கின்றது.

ஆம்; நான்கூட அந்த ஈயாக மாறத் தான் போகிறேன். தேன் கூட்டின் காலடியில் என் உயிரைப் பினை வைக்கப்போகிறேன்.

புதுக்கோட்டை டவுனில் நான் ஹோட்டலில் தங்கியிருந்தேன். காலையில் விழித்தெழுந்ததும், எனக்கு அறிமுகமற்றவர்கள் சிலர் அறிமுகமாயினர். பழக்கப்பட்ட முகங்களுக்கு மத்தியில் துன்பமும் குழப்பமும் கலக்கமும் தலைகாட்டத் தயங்காதா? அவர்களை நான் எங்கே, எப்போது, எப்படிப் பார்த்தேன் என்பதை ஒரளவுக்கு அனுமானம் செய்து கொண்டு, அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன் . மோஹினியின் சோதனைப் பொருள்களாக வந்தவர்கள் அவர்கள். அன்றைக்கு ஒவ்வொருவரும் எப்படி இருந்தார்கள்? முகத்தில் பவுடர் என்ன , காரைக்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/80&oldid=1375929" இலிருந்து மீள்விக்கப்பட்டது