பக்கம்:அமுதவல்லி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம். 79

கால் வாசனைத் திரவியம் என்ன, கையில் காப்பிக் கொட்டைச் சங்கிலி என்ன, கழுத்தில் எனாமல் டாலர் பதித்த மைனர் சங்கிலி என்ன ! ...அப்பப்பா ! காதலின் கதையை இன் சுவைக் காவியமாக்குவதற்கு இத்தனை ஆடம்பரங்களா? ..

பாவம், அவர்கள் முகத்திலும் கரியைப் பூசி அனுப்பி விட்டாளாம் மோஹினி!

வாழ்க்கையே ஒர் ஆடம்பரம். அப்படிப்பட்ட ஒர் உணர்வு தான் நேற்றுவரை-அதாவது, மோஹி னிப்பெண் என்னுள் தோல்வியை எழுதிக் காட்டிய நேரம் வரை சதா என்னிடம் பிறந்து வளர்ந்து, என்னைப் பணச் செருக்குக்கு அடிமையாக்கி, பின்னர், பணமமதையின் கடைக்கண் வீச்சில் சிக்க வைத்து, காதலெனும் மகுடி நாதத்தின் கைப்பொம்மையாகவும் உருமாற்றி வந்திருக்கிறது.

மோஹினி தாசி, அப்படிச் சொன்னால், தெய்வத் திருவுளத்திற்கு அடுக்காது. அவள் இருமனப் பெண்டிர் குலம், இருக்கட்டும். அவள் மனம் ஒரு பூ மல்லி கைப்பூ கற்புக்கு ஒர் எடுத்துக் காட்டு அப் பூ.

அஞ்சேல் என அபயமுத்திரை காட்டி நின்ற அம்பிகையின் திருச்சந்நிதானத்திலே, அஞ்சேல் முத்திரை பதித்து ஆடினாள் 

மோஹினி.

    “ தாம். திதாம்...
      தீம்...ததை...!”

நட்டுவனாரின் கட்டைக் குரலும் நார்மணியின் பாளை வெடிச் சிரிப்பும் என்னை விட்டு அகல வேண்டுமானால், முதலில் நான் பிடிசாம்பலாக வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பாக்கியம் எனக்குக் கிட்டினாலும் தகும். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/81&oldid=1375936" இலிருந்து மீள்விக்கப்பட்டது