பக்கம்:அமுதவல்லி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 அமுதவல்லி

ஆனால்... ஆனால்... அவள் என்னை - என்னுடைய புனித நிலையைச் சந்தேகப்பட்டாளே?... அவளைப் பழி வாங்காமல் நான் அடங்குவதா? பெட்டகத்தில் கடைசிக் காசு இருக்கும் பரியந்தம் செலவழித்துப் பார்த்து விடத்தான் போகிறேன்!

மோஹினியை ஆட்டிப் படைக்கும் நட்டுவனார் சேகரலிங்கம் இப்பொழுது என் கைக்குள் அடக்கம்!

இதோ, என் கைப்பிடிக்குள் ஒரு படம் அகப்பட்டிருக்கிறது. மரக்கிளை பற்றி ஒயில் மிளிர நிற்கும் மோஹினிக்கு அருகில் நிற்கும் அந்த ஆணழகன் யார்?இந்தப் படம் ஒன்று போதாதா, அவளைப் பழிவாங்க?

நெஞ்சம் என்பது நீராழி மண்டபத்துத் திருவிளக்கு. ஆழம் பறித்துக் காவல் புரியும் நீர் வெளி தான் மனச்சாட்சி. நீரைக் கடந்தால், நீராழி மண்டபத்தைத் தரிசிக்க முடியும். மனச்சான்றின் அனுமதிச் சீட்டுப் பெற்றால்தான் பெறக்கூடிய பக்குவமும் தெளிவும் பயிற்சியடைந்தால்தான், மனம் எனும் திருவிளக்கு தெளித்துக் காட்டும் தெய்வ ஒளியைத் தரிசிக்க வாய்க்கும்.

மனத்தின் காதை இது.

வாழ்வின் கதை இது.

மணிகண்டன் இருக்கிறான் பாருங்கள். அவனைப் பற்றி அவனது இது நாளைய நடவடிக்கைகளை வைத்து எடை போட்டுப் பார்த்தால், அவன் ஒரு விந்தை மனிதன் என்றுதான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் பச்சையாக, மனிதாபிமானத்தோடு சொல்ல வேண்டுமானால், அவனை 'மனிதப்பிராணி' என்றும் அழைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/82&oldid=1378144" இலிருந்து மீள்விக்கப்பட்டது