பக்கம்:அமுதவல்லி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 81

வேண்டும். தவறில்லை. மனிதனுக்கென்று ஆக்கப்பட்டிருக்கும் சட்ட திட்டங்களை அவன் கட்டுக்குலைத்து நொறுக்கி வீச முனையும்போது, அவனுக்கு உகந்த பேரும் புகழும் அவனை விட்டு விலக முனைவது தானே உசிதம்: மணிகண்டன் யாராயிருந்தால் என்ன? நான்: யாருக்காகப் பயப்பட வேணும்? உடலுக்குப் பட்டுச் சொக்காய் அத்தியாவசியமாக இருக்கக்கூடும். உள்ளத்திற்கு அது தேவையில்லை யல்லவா? மணிகண்டனிடமே நான் கேட்டுவிட்டேன் நீர் மனிதன் தானா? கருதிய பொருள் கைக்குக் கிட்டவில்லையென்றால், 'சீ, சி: இந்தப் பழம் புளிக்கும்!' என்று நாகரிகமாகவும் நாசூக்காகவும் தப்பிய நரியாக மாறும்; நான் மறுப்புச் சொல்லேன். ஆனால், நீர் நினைத்த வகையில், உம் காதல் வெற்றி பெறவில்லை யென்பதற்காக, மோஹினியைப் பழி வாங்கப் போவதாக முடிவு கட்டியிருக்கிறீரே? இது மனிதப் பண்பு தானா? நீர் மனிதனா? இல்லை, மிருகமா? சே!” என்று.

சைத்ரீகன் சுந்தரன் என்னிடம் கடிதம் ஒன்றை நீட்டினான் என்றேன் அல்லவா?-அவனை மனத்தில் நினைத்துக் கொண்டு, கடிதத் தாளைப் பிரித்தால், அங்கே மணிகண்டனின் பயங்கரமான முகத்தைத் தான் என்னால் பார்க்க முடிந்தது. கடிதங்கள் மாறிவிட்டனவே தவிர, கதையை மாற்ற அவற்றால் முடியவில்லை.

மணிகண்டன் எழுதியிருந்தான். “மோஹினி!

நீயே சதமென்று, உன்னைச் சரணடைந்தேன் நான், பரிசுத்தமான என்னுடைய அன்பு மனசைப் புண்படுத்தி விட்டாய் நீ. மறக்க முடியாத எந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/83&oldid=1378204" இலிருந்து மீள்விக்கப்பட்டது