பக்கம்:அமுதவல்லி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 அமுதவல்லி

ஏமாற்றத்தையும் தாங்கிக் கொள்ள பெண் மட்டும் தான் ஒப்பமாட்டாள் என்பது கிடையாது. ஆணும் ஒப்ப மாட்டான், இதோ, நான் இருக்கிறேன். எனக்குக் கை கொடுக்கும் சந்தர்ப்பத்திற்காக நான் காத்திருக்கிறேன். எனது நினைப்பு கைகூடி வந்தால், தீர்ந்துவிடும் உன் வாழ்வு என் ஆண்மையின் புனித சக்தியைச் சோதனை செய்யப் புது நாடகம் நடத்தினவளாயிற்றே நீ? ஆனால், அதே நேரத்தில், உன் புனிதத்தையும் நான் பட்டவர்த்தனமாய்க் கண்டதறிய விரும்புவது சகஜமேயன்றோ? ஒரு பக்கம் பழி புறப்பட்டால், எதிர்ப் பக்கம் அந்தப் பழியைச் சுமந்து கொண்டிருக்காது என்பதையாவது நீ மறந்து விடாதே!

இவ்விதம், மணிகண்டன்.” (ஆடுதுறை பெரிய பண்ணை)

பெண்ணை ஒரு பண்ணை ஆட்டிப் படைக்கும் லட்சணத்தை என்னவென்று சொல்வேன்?

இந்தக் கதாசிரியர்களே இப்படித்தான்!

யதார்த்த வாழ்க்கை வேறு; லட்சிய வாழ்க்கை. வேறு.

இவை இரண்டையும் தாங்கள் குட்டை குழப்பிக் கொள்வதுடன் நிற்காமல், நம்மையும் வேறு குழம்பச் செய்துவிடுவார்கள்:

இந்த உண்மையை-அதாவது, என் வாதப்படி உதிர்ந்துள்ள உண்மையை-அதாவது, அவரது தர்க்கத்தின் பிரகாரம் அமையவல்ல பொய்யை நான் என்னவென்று எடுத்துரைப்பேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/84&oldid=1378223" இலிருந்து மீள்விக்கப்பட்டது