84
அமுதவல்லி
நிழலிலேயே ஒண்டி விடத் தான் துடிக்கிறான்! என்று எரிதழலில் துவப்படும் சாம்பிராணித் துகள்களினின்றும் புறப்பட்டுப் பரவுத் தூய நறுமணசமெனச் செப்பினாளே? எல்லாம் பொய்யா?
ஆம்: அவளே பொய்!.. பொய்யே அவள் ...!
அந்தப் பொய்யின் திரையைக் கிழித்துத் தரையில் வீசியெறிய, இந்தப் போட்டோப் படம் எனக்குக் கடைசிக் கட்டம் வரையிலும் கை கொடுக்கும்: அதுவே எனக்கு உயிரும் கொடுக்கும்!...ஏன் முடியாது?
புதுக்கோட்டையில் சந்தைப்பே ட்டை என்றால் ரொம்பவும் கியாதி, அதைச் சுற்றிப் பார்த்து விட்டு, 'பிரஹதாம்பா' ளில் சினிமாப் பார்த்தேன். பார்த்து முடிந்தவுடன், நான் தங்கியிருக்கும் ஹோட்டலை எல்லையாகக் கொண்டு வழி கழித்தேன். சந்தைக்கு வந்திருந்த என்னுடைய உறவுக்காரப் பிள்ளை ஒருவன் என்னிடம் கொட்டிய செய்திகள் என் சித்தத் தைக் கலக்கின. சரி, நீ போ, தம் பி. நாளைக்காலம் பற நான் புறப்பட்டு வாரேன்னு அம்மா கிட்ட சொல்லு" என்றேன்.
குழம்பிய மனம் என்னை அழுத்த, அந்த அழுத்தத்தில் என் மனச்சாந்தி அழுந்த நடந்தேன். நட்டு வனார் சேகரலிங்கம், குறுக்கே ஓடியே பூனையானார். இந்தப் பூனையைக் கெட்ட சகுனமாகக் கொள்ளலாமோ! கூடாது, கூடாது!
அவர் என் காதைக் கடித்தார்.
நான் பல்லைக் கடித்தேன்!