பக்கம்:அமுதவல்லி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 86

பொதுவாகச் சொல்லும் பேச்சு இது.

இந்த எழுத்தாளர்களுக்கு, சமகா மயங்களில், குரூரமான ஒர் ஆசையின் உணர்வு பொறி தட்டிக் காட்டுவது இயல்பு. அதன் விளைவாகத்தானே? என்னவோ, அவர்கள் எந்த ஒரு நட்பையும், எந்த ஒரு காட்சியையும், எந்த ஒரு பொருளையும் விசித்திரம் நிழலாடும் பார்வையுடன்-விந்தை கரைகட்டும் சுழிப்புடன்-வேடிக்கை பாய்ச்சல் காட்டும் குறும்புடன் நோக்குவார்கள்: தீர்ப்பும் எழுதிவிடுவார்கள், -

அந்த எழிலரசி மோகினியிடம் எனக்குப் பரிச்சயம் உண்டு என்பதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். நினைவிருக்க வேண்டும். பரிச்சயம் என்றால் பழக்கம் என்று தான் அகராதியில் அர்த்தம், ஆகவே, என்னைப் பற்றி வாசகர்கள் எவ்விதமான பரிணாமத்தையும் உண்டுபண்ணிக் கொள்ளக் கூடாது. மோஹினிதாசி. இருக்கலாம். ஆனால், அவள் அழகை எப்படி உங்கட்கு எடுத்துக் காட்டுவேன்? மெய்தொட்டு, மெய் தீட்டிக் கூறவேண்டுமெனில், அழகுக்கு எப்படி உருவக் கொடுக்க இயலும்? காமவேதனை தட்டும் படாத, நறுவிசாகக் காதளவோடிய அவளுடைய கயல் விழிகள் இரண்டையும் கண்டேன். நான் திட்டமிட்டு எனக்குப் பிடித்தமாதிரி எழுதிய பிரச்சினைக் கதையைத் திரும்ப ஒருமுறை படித்துப் பார்க்கும் பொழுது என்னுள் ஏற்படும் மயக்கம் கிளர்ந்தெழுந்தது. அவள் உதடுகளைக் கண்டேன். இளமை நிலவின் அடிமட்டத்தில் அடங்கிக் குறுநகை கோர்க்கும் இன்ப வெறி எழுந்தது. மூக்கின் அமைப்பைப் பார்த்தேன். நான் விரும்பும் லாவண்யம் பெற்றிருந்தது அது. தேகக்கட்டு தெரிந்தது. ஒவியர் மணியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/87&oldid=1378281" இலிருந்து மீள்விக்கப்பட்டது