பக்கம்:அமுதவல்லி.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 அமுதவல்லி __________________________________

வரையும் சிற்ப உருவங்களின் உயிர் ஊடாடும் கவர்ச்சியை இமை வெட்டாமல் பார்த்தேன்.

  ஊம், என் அமிர்தம் இதைப் படித்தால் -இது பற்றிக் கேள்விப்பட்டால் என்மீது சினம் கொள்ளப்போகிறான்!
  ஆக, ஒன்று உறுதி:
  மோஹினி எழில் மோஹினியே!
  என்னைக் கண்டு பேச வந்திருந்தாள், நேற்று, அது அவள் கடமையாகவே இருக்கட்டும். மணிகண்டன், சுந்தரன் ஆகிய இரு காதல் கோமாளிகளுக்காக நான் செய்தாக வேண்டிய கடமையும் காத் திருக்கிறதல்லவா?
  பையன் பானம் கொணர்ந்தான்,
  "ரொம்பவும் இனிக்கிறதுங்க, ஐயா!" என்றாள் அவள்.
  அவள் பேச்சைவிடவா? இல்லை, அவள் ரூபத்தைக் காட்டிலுமா? இல்லை, அவள் நாட்டியத்தைப் பார்க்கிலுமா?
  அவளிடம் கேட்டேன். இவ்விருவரையும் பற்றித் தான். 
  நகைகள் மின்ன, அவள் நகை புரிந்தவளாக, பேசாமல் கொள்ளாமல், நிழற்படமொன்றை எடுத்து நீட்டினாள், ஓர் இளைஞனின் படம் அது: தீர்க்கமான எழில் பூத்த உருவ அமைப்புடன் விளங்கினான். தொடர்ந்து அவள் இதழ் திறந்து பேசிய பேச்சின் முத்தாய்ப்பில் என் இதயம் அடித்துக் கொண்டது. சற்றுப் பொறுத்து வந்த ஓர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/88&oldid=1378315" இருந்து மீள்விக்கப்பட்டது