பக்கம்:அமுதவல்லி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 அமுதவல்லி

நான் சொல்லுகின்றேன்:

காலில் முள் தைத்து விடுகின்றது. வலி எக்கச் சக்கம். அடிப்பாதத்தின் விளம்பில் முள் பதிந்த இடம் மெல்லிய சதைப் பிடிப்புக் கொண்டது ஆகவே, முள் லகுவாகப் பதிந்து விடுகிறது. முள்ளை எடுக்க முள்ளையே பயன்படுத்துவார்கள். ஆனால்: கால் அசைவினாலோ, அல்லது எப்படியோ, தைத்த முள் தன்னாலேயே விழுந்து விடுகிறதென்று கொள் ளுவோமே. அப்போது, உபாதைக்கு உள்ளானால்: உனுக்குக் கூடுதலான மகிழ்வு .உண்டாவது இயல்பே அல்லவா?

இன்னொன்று :

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது சாகஸ உலக வாழ்விற்கும் பொருந்தி வர வல்லதொரு புதுமொழியாகும். குத்திய முள்ளை எடுக்க வேண்டிய மற்றொரு முள்ளே கதாநாயகக் கோலத்திலிருந்து வில்லன் வேஷத்திற்கு உருமாறும் நிலை உருவானால், சாகசத்தைப் பிறப்பித்தவனின் மனமும், சூது மதியின் பிரதிபலனை எதிர்பார்த்த இதயமும் படும் பாடு சொல்லத் தரமா?

வாழ்க்கையே முள்,

சிலர் முள் வலியை உணருகிறார்கள்.

அவர்கள் வாழ்ந்து காட்டியவர்கள். வலி தாளாமல் உதடுகளை அசைத்து விடுகிறார்கள்.

சிலரை முள்ளின் வலி ஏதும் செய்ய முடிவதில்லை.

அவர்கள் ஞானிகள்!.

இப்படிப்பட்ட விசித்திரமான பூதலம் தன் போக்கில்-தன் அளவில் தன் நியதியில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கையில்தான், பாவம், அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/90&oldid=1439700" இலிருந்து மீள்விக்கப்பட்டது