பக்கம்:அமுதவல்லி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90. அமுதவல்லி

தமிழுக்குத் தான் இனிமை மிகுதி என்பதாகப் படித்திருக்கின்றேன் நான். இப்பொழுது அவள், அழைத்த அந்த ஆங்கிலச் சொல் கூட இனிமை சொட்டி ஒலிக்கிறதே?.

மோஹினியை ஏறிட்டுப் பார்த்தேன். அதே பார்வையின் மூலை மட்டத்தில் அந்தப் புதிய இளைஞனின் சிரிப்பையும் பார்த்தேன். அவனைப் பற்றி அவள் அறிமுகப்படுத்தினாள். என்றேன். அறிமுகப்படுத்திய விதத்தை அல்லது பாவணையை உங்களிடம் விரிவுபடுத்தினால் மோசம் ஏதுமில்லை என்பது என் அபிப்பிராயம், புண் உடம்புடன் சாம்பலாவதில் அந்த ரகசியத்துக்கு அப்படி என்ன தான் விடி மோட்சம் வந்து சேர்ந்துவிடப் போகிறது?

மோஹினி சொன்னாள். மோகம் முகிழ்த்த உதடுகளின் நெளிவு சுளிவுகளிலே கள்ள நகை இழை யோட, தாபம் நிறை விழிக் கணைகளிலே மோஹக் கவர்ச்சியின் புனிதம் தழைபின் ன அவள் பேசினாள். மார்பகத்தின் இருமுனைப் பகுதிகளில் வெய்துயிர்ப் பின் களர் நிலம் காணியாட்சி பிடித்துக் கொண்டிருந்தது. தீ சிரிக்குமோ?

அவள் சொன்னதாவது:

“எழுத்தாளர் ஐயா. நீங்கள் வாழ்க்கை எனும் மர்மக்கதை சொல்லி வந்திருக்கின்ற எத்தனையோ தினுசான அதிசயத் திருப்பங்களைக் கற்பனை பண்ணியிருப்பீர்கள். ஆகவே, நான் சொல்லும் இவ்விஷயம் உங்களுக்கு ஒரு பொருட்டாகத் தோன்ற வாய்ப்பில்லை; இருக்கவேண்டுமென்று விரும்ப வுமில்லை நான். விரும்புவதும் உசிதமாகாது. ஆனால், இந்த நடப்பு என் வரையிலேனும் ஒரு மாற்றம் என்று தான் செப்ப வேண்டும். இந்த மாற்றத்துக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/92&oldid=1376470" இலிருந்து மீள்விக்கப்பட்டது