பக்கம்:அமுதவல்லி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 92 அமுதவல்லி

என்ன செய்வேன்? அபலை நான்! என்னை ஆட்டிப் படைத்து விட்டார்கள் வெறும் மனிதர்கள்!

“இனி நான் பாக்கியவதி. இதோ, இவரே தான் என் காதலர்: கணவர். என்னை- என்னுள்ளே உறைகின்ற என்னை, இதயம் தழுவிய தேசத் தோடு நேசம் முத்தமிடும் நினைவுப் பொலிவுடன் நினைவு காதலிக்கும் நேர்மையுடன் விரும்புகிறார் இவர், அடுத்த பதினைந்தாம் நாள் சாந்தனார் தெய்வத்தின் திருச்சபையின் முன்னே எங்கள் வதுவை விழா நடைபெறும். அழைப்புக்கள் அனுப்புவது எங்கள் குலவழக்கமல்ல. ஏனென்றால், இவ்வகையான திருமணங்களே எங்கள் குலதருமப் பிரகாரம் செல்லுபடியாகா .ஊம்,:குலமாவது!.. தர்மமாவது!...”

மோஹினியின் அழுகையில் கூட எவ்வளவு எழிற் கவர்ச்சி சொட்டுகிறது?

வானின் உயர் பீடு பெறும் பொற்பு நிறை அழகே உன் பெயர் தான் விதியா?

மோஹினியைப் பொய் என்றேன். இப்பொழுது, அவள் என்னையே பொய்யாக ஆக்கி விட்டாளே?...

எந்தப் படம் என் சூழ்ச்சித் திருவிளையாடலுக்கு எனக்குக் கடைசி நிமிஷம் வரை கைகொடுக்கு மென்று மனப்பால் குடித்து வந்தேனோ, அதே படம் இன்று அவளுக்கு-அந்த மோகினிப் பெண்ணாளுக்குக் கை கொடுக்கு பரம ஒளஷதமாக ஆகிவிட்டிருக்கிறதே?

தெய்வமே, அழகுக்கு உவமைப் பொருளாக

அவளை ஏன் படைத்தாய்? அந்த அழகை விலை போட்டு வாங்க முடியாத நிலையில் என்னை ஏன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/94&oldid=1376490" இலிருந்து மீள்விக்கப்பட்டது