பக்கம்:அமுதவல்லி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 93

படைத்தாய்? அந்த மோஹினியைச் சந்தித்து, அவள் வசம் நான் வசமிழந்து இப்படிப் பேயாய்த் தவிக்கும் திலைக்கு உடந்தையாக, என் கண்களில் அவளது எல்லையற்ற பேரெழிலை ஏன் காட்டித் தொலைத்தாய்?...

சந்திப்பு என்பது கூட, விட்ட குறை-தொட்ட குறையின் அறுவடைப் பலன் தானோ?... நான் என்ன கண்டேன்? இந்தக் கதை இருக்கட்டும்.

நேற்று நடந்த சம்பவம் என்னுள் படக் காட்டுவதைப் பார்க்கையில், அதே தொட்ட குறை-தொடாத குறையின் கதைதானே நினைவில் பளிச்சிடுகிறது? அம்மா கூப்பிட்டிருந்தாள். ஊருக்குப் போயிருந்தேன். அங்கே ஒரு சந்திப்பு. புதிது என்று சொல்வதற்கு உரித்தானதா? ஊஹீம்! பற்றிய சுற்றம் காட்டி, ஒட்டிய உறவைக் குறித்துச் சொல்ல எனக்கெனப் பிறந்திருக்கின்றாளாம் எவளோ ஒருத்தி அவள் எனக்கு அத்தை மகளாம்! அம்மா சொல்கிறாள். கனியைப் பற்றிக் கனியக் கனியப் பேசுகிறாள் அம்மா. அப்பாவிற்குப் பிறகு அம்மாதான் எங்கள் பண்ணைக்கே அதிகாரி. ஆடு துறைப் பண்னணை என்றால், பின்னே சும்மாவா?

வந்தவளைப் போய்ப் பார்த்தேன். அழகிதான். அட்டியில்லை. நிர்மலா என்று நாமகரணம். எல்லாம் சரி. என் இதயத்தில் இவளைப் பிடித்துப்போட ஒற்றைக் காலால் தவம் இருக்கிறாள் அன்னை. என் னால் நிலையை நன்கு ஊகித்துக் கொள்ள முடிகின் றது. ஆனால், இதய பீடத்தில் தனி ஆசனம் தந்து அமர்த்திக் கொண்டுள்ள மோஹினியை என்னால் எப்படி வெளியேற்ற இயலும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/95&oldid=1376509" இலிருந்து மீள்விக்கப்பட்டது