பக்கம்:அமுதவல்லி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 அமுதவல்லி

மோஹினி, மெய்யாகவே நீ பொய்யில்லையா? மோஹினி அவதாரம் கொண்ட புனை வடிவம் பதுமை இல்லையா நீ? பின் ஏன் என்னை இப்படி ஆட்டிப் படைக்கிறாய்? உன்னைப் பற்றி நட்டுவனார் சேகரலிங்கம் சொன்னதெல்லாம் கதைதானா? என் புனித மிகு ஆண்மையைச் சோதித்திட அன்று நீ நாடக மாடினாய்! இன்று, என்னையே பரீட்சை செய்ய இந்த நாட்டுவனார் உன்னால் அனுப் பப்பட்டிருக்கிறார்!

சோதனை என்பது எரிதழல் அல்ல; அதுவே, தீக்குளிப்பு மண்டபம் போலும்! நீ தீயா?

நான் தோன்று விட்டேனா? முடிந்த முடிவிலே.

மோஹினி, உனக்கு ஒரு கடிதம் எழுதினேனே, நெஞ்சிருத்திக் கொண்டிருப்பாயா? உன்னுடைய பவித்திரமான முதற் பார்வையைக் கையேந்திப் பெறப் புண்ணியம் கொண்டதாக நான் களித்துப் பறந்து திரிந்த சடுதியில், உனக்கு நான் அனுப்பிய முடங்கல்களிலே இப்படி எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம், “ உன்னைப் பார்த்தவுடன், பிறபிப்பயன் எடுத்ததன் தாத்பரியம் எனக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது’ என்று குறித்திருந்தேன்.

எல்லாம் இனிமேல் பழங்கதை: என்னைப் பார்த்த நிகழ்வுகூட தெய்வானுகூலமாகவே இருக்கவேண்டுமென்றும், என்னை அன்று உன் வீட்டிலேயே தங்கும் படியும் நீ சொன்னது கூட பொய்க் கனவாகி விட்டதே!

மோஹினி, நீ இப்போதாவது சொல்! பத்மா சூரனை துவம்சம் செய்ய திருமால் மோஹினி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/96&oldid=1376518" இலிருந்து மீள்விக்கப்பட்டது