பக்கம்:அமுதவல்லி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூ வை எஸ். ஆறுமுகம் 97

சிைத்திரிகன் பிழைக்கத் தெரிந்தவனாம்!

ஆடுதுறைப் பண்ணை மணிகண்டன் பிழைக்கத் தெரியாதவன் சூது கவ்விய மதியுடன், பிடிப் பற்றுக் கிடக்கிறானாம்! எப்படியோ, அவனுடைய திருமண வைபவமும் ஒரு நாள் நடக்கத் தான் போகிறது. .

மோஹினி-இன்பசாகரன் வதுவை விழா வெகு அற்புதமாக நிகழ்ந்தது.

சாப்பாடு என்றால், செட்டி நாட்டுச் சாப்பாடு: இன்பசா கரனுக்குத் தான் எவ்வளவு குது கலம்! ..

“முதல்-இரவின் பொழுது விடிந்தது. எனக்கு ஒரு செய்தி விழுந்தது.

“இன்பசாகரனின் உயிர் விடுதலை அடைந்து விட்டது.

மோஹினியை என் மனக் கண் களில் கொணர்ந்து நிறுத்திப் பார்க்கிறேன். என் மெய் சிலிர்க்கிறது. பொய்யினின்றும் பிரிந்து, மெய்யே உயிராக நிற் கின்றாள் அவள் என்னுள் மற்றுமொரு நினைவு பளிச் சிடுகிறது. திருமுருகாற்றுப் படை"யில் ஒரு கட்டம். மனிதர்களின் கைத்திறனுக்கும் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு முருகவேளின் அழகு இருக்கிற தாம்! “கை புனைந்தியற்றாக் கவின் பெறு வனப்பு’ என்று பேசப்படுகிறது. அப்படிப்பட்ட தெய்வீக அழகு இந்தத் தாசி மோஹினிக்கும் வாய்த்திருந்தது!

மீண்டும் ஒரு செய்தி. நான் எப்படிக் கூறுவேன்? அந்த உடற்கூடு பிடி சாம்பலாகிவிட்ட மறு கணத்திலேயே, அந்தப் பிடி சாம்பலுடன், தீ"யின் எரிசாம் பலும் கரைந்து விட்டதே!

தாம். தீம்... ைத. ைத’ என்ற சதங்கைப் பண் ஒலி உங்கள் செவிகளில் விழுகிறதல்லவா?

ஆம்; மோஹினி அசல் மோஹினியேதான்!

※ ※ ※

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/99&oldid=1376535" இலிருந்து மீள்விக்கப்பட்டது