இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எனது நீண்ட நாள் ஆசை
அமுதும் தேனும்
இந்நூல் வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில் நான் எழுதியிருக்கும் கவிதை நூல்,
மேலை நாட்டில் இப்படிப்பட்ட கவிதைகள் அதிகம் வெளிவருகின்றன. இங்கு அதிகம் வெளி வருவதில்லை.
வரலாற்று அறிவு தேய்ந்து போயிருக்கும் இந்நாட்டில் இத்தகைய வரலாற்றுக் கவிதைகள் வெளிவந்தால் இதன் மூலம் வரலாறு வெளிச்சம் பெறும்.
எனவேதான், நான் நடத்தி வந்த காவியம், இலக்கியம், ஊர்வலம், சுரதா ஆகிய இதழ்களில் வரலாற்றுக் கவிதைகளை எழுதியும், அவ்வாறு பலரை எழுதச் செய்தும் கதைக் கவிதைகளுக்கு முதலிடம் அளித்து வந்தேன்.
இது நூலாக வெளிவந்ததன் மூலம் எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியிருக்கிறது.
15–8–2005
சென்னை–78.
– சுரதா