அமுதும் தேனும்
48
என்னுதட்டுக் குரியவளை, மதுக்கிண் ணத்தை
என்கையில் தருபவளை, ஷெரினென் பாளை,
உன்னுதட்டில் சேர்த்திடநீ விரும்பு கின்றாய்.
உனையவளும் விரும்புகின்றாள். நிலைக்கண் ணாடி
என்முகத்தை மட்டுந்தான் காட்ட வேண்டும்
என நினைத்தல் தவறன்றோ? இதோபார்!உன்னை
அன்னவளே விரும்புகின்றாள். இதனை நான்தான்
அறிந்துகொள்ளா திருந்துவிட்டேன். அதுபோ கட்டும்.
உன்விருப்பம் நிறைவேற வேண்டு மாயின்
ஒன்றுரைப்பேன் இதனைக்கேள்; எனது நாட்டின்
பின்புறத்தில் அசையாமல் படுத்தி ருக்கும்
பெரியமலை தனைக்குடைந்து வழியுண்டாக்கித்
தென்புறத்து நதியதனுள் ஒடு மாறு
செயவேண்டும். அவ்வாறு செய்வா யாயின்
அன்னவளை நீயடையக் கூடு மென்றான்.
அப்போதே புறப்பட்டான் அந்தச் சிற்பி.
மனத்தின்கண் காதலியை நிறுத்தி, நீண்ட
மலையின்கண் சிற்றுளியை நிறுத்தி, ஆங்கே
தினந்தோறும் மலையதனைக் குடைந்து பாதை
செய்துவந்தான் அச்சிற்பி. அன்னோன் செய்யும்
வினைப்போக்கின் புதுமைகளை ஊரார் கண்டு
வியப்படைந்து பாராட்டும் செய்தி கேட்டு
மனச்சோர்வோ டெழுந்திருந்தான் மன்னன், அந்த
மன்னவன்முன் ஓர்கிழவி வந்து நின்றாள்.