உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதும் தேனும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பாவேந்தருக்குப் பிறகு ஒரே சிறந்த கவிஞர்
கரதாதான் சுயமரியாதையுடன் பாடும்
சுதந்திரக் கவிஞர் அவர்
                                                                       –தந்தை பெரியார்

காலத்தை வெல்லும் கவிதைக்குச்
சொந்தக்காரர் கவிஞர் சுரதா.
                                                            –பேரறிஞர் அண்ணா

சுரதா அவர்களை வெகுநாட்களாக அறிவேன்
இவருடைய வசன நடை மிகவும்
போற்றுதற்குரியது. ஜீவன் நிரம்பியது
பாத்திரத்திற்கேற்ப கருத்துப் பளீரென்று
வருகிறது.
                             –நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

சுரதாவின் எழுத்துக்குச் சுரதாவின் எழுத்தே நிகர்.
அவர் யாரையும் பின்பற்றுவதில்லை.
திருடுவதில்லை தானே தோன்றும் சொற்றொடர்
ஒவ்வொன்றும் இனிக்கும் கவிதைத்
துணிக்கை.
                                                  –பாவேந்தர் பாரதிதாசன்