பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

அறிவித்தார். புலவர்மேல் குற்றம் சாராதவாறு திறமையாகத் தாமே வாக்களித்து அகப்பட்டுக் கொண்டதாகச் சொன்னர். அதைக் கேட்ட யாவரும் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

விரைவில் வீட்டிலிருந்து ஆடைகளை வருவித்து அணிந்துகொண்டு, வல்லாளர் காஞ்சிக்குப் புறப்பட்டார். அரசனைக் கண்டு உரையாடி யிருந்தார். மறுபடியும் ஊர் வந்து சேர்ந்தார்.

அங்கே அவருக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது. அவரிடம் கொடை பெற்ற புலவர் அங்கே ஒரு மூட்டையுடன் காத்துக்க்ொண்டிருந்தார். வள்ளல் தம் வீட்டை அடைந்தவுடன் புலவர் தம் கையிலிருந்த மூட்டையை அவர்முன் வைத்து நெடுஞ்சாண் கிடையாக அவர் காலில் விழுந்து எழுந்தார். அவர் கண்ணில் அருவி பாய்ந்தது. விம்மியபடியே பேசலானார்.

"தங்களைப் போன்ற கொடையாளியை நான் பார்த்ததே இல்லை. தங்கள் பெருமைகளைக் கேட்டறிந்த நான் தங்களைச் சோதிக்க வேண்டும் என்றே திட்டமிட்டு வழி மறித்து இந்தக் காரியத்தைச் செய்தேன். தாங்கள் சோதனையில் வெற்றி பெற்றிர்கள். நான் செய்தது அறியாமையானலும், தங்கள் இணையற்ற வள்ளன்மையை உலகத்துக்கு வெளிப்படுத்த அந்த அறியாமை உதவியது. தாங்கள் வழங்கியவற்றை இதோ அப்படியே கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக்கொண்டு என் பிழையைப் பொறுத்தருள வேண்டும்' என்று கூறி அழுதார் புலவர்.

"புலவரே, நீங்கள் ஏன் இப்படி வருத்தப்பட வேண்டும்? உங்கள் முகமாக இறைவன் இந்தச் சோதனையைச் செய்தான். அவனே எனக்குத் துணை நின்று. என் கொள்கையை நிலை நிறுத்தினன். ஒரு முறை அளித்ததை மீண்டும் பெறுவது தவறு. அப்-