பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102


இராமநாதபுரத்தில் அரசவைப் புலவராகச் சர்க்கரைப் புலவர் என்பவர் இருந்து தம்முடைய கவியாற்றலால் பெரும்புகழ் பெற்றுவந்தார். நெட்டி மாலைப் புலவர் பரம்பரையில் வந்தவர் அவர். அவர் ஒரு நாள் மருத பாண்டியரைப் பார்க்க எண்ணினார். அம் மன்னர் கலிய நகருக்கு வந்ததை அறிந்து, அங்கேயே சென்று, அவரைக் கண்டு அளவளாவலாமென்று தீர்மானித்தார். அவரைப் போய்ப் பார்க்க வேண்டுமானால் வெறுங்கையோடு போகலாமா? பழம் முதலிய கையுறைகளை மற்றவர்கள் கொண்டு செல்வார்கள். புலவரும் அவற்றைக் கொண்டு செல்லலாம். ஆனால், பிறர் யாரும் கொண்டு செல்ல இயலாததை அவர் கொண்டு போவதுதானே சிறப்பு? சர்க்கரைப் புலவர் நாகபந்தம், முரசபந்தம் முதலிய சித்திர கவிகளைப் பாடுவதில் வல்லவர். அவர் அட்டநாக பந்தமாக ஒரு கவியை வரைந்தார். எட்டு நாகங்கள் பின்னிப் பிணையலிட்டதாக அமைந்த சித்திரம் ஒன்றில் கவியை அடைந்திருப்பார்கள். அதுதான் அட்ட நாகபந்தம். அத்தகைய கவிகளில் சில எழுத்துக்கள் பல இடங்களில் பொதுவாக அமைந்திருக்கும்.

காலையில் எழுந்து நீராடிவிட்டு இந்த அட்டநாக பந்தத்தை வரைந்து முடித்தார் புலவர்.அதை ஓரிடத்தில் வைத்துவிட்டுச் சிவபூசை செய்யப்போனார். பூசையை நிறைவேற்றி உணவுகொண்டு மருத பாண்டியரைப் பார்க்கப் புறப்பட்டார். இராமநாதபுரத்து அரசர் அவருக்குச் சிவிகை வழங்கியிருந்தார். அந்தச் சிவிகையில் ஏறி அவர் கலிய நகருக்குச் சென்றார்.

புலவர் வந்ததை அறிந்த மருத பூபர் மிக்க ஆர்வத்தோடு அவரை வரவேற்று இன்மொழி கூறி அமரச் செய்து அளவளாவத் தொடங்கினர். புலவர் தாம் பாடிய