பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கட்டுரைப் பயிற்சி

1. வெள்ளக்குடி நாகனார் எவ்வாறு குடிமக்களுக்கு நலம் செய்தார். என்பதை விளக்கி எழுதுக.

2. பாண்டியன் நெடுஞ்செழியனுக்குக் குடபுலவியனார் எவ்வாறு தம் கருத்தை அறிவுறுத்தினார் என்பதைப் புலப்படுத்தி ஒரு கட்டுரை வரைக.

3. பாணன் செய்த குற்றத்துக்கு வன்பரணர் என்ன காரணங் கூறினார்? அவ்வாறு கூறுவதற்குக் காரணமான நிகழ்ச்சியைத் தெளிவுபடுத்துக.

4. கோவூர் கிழார் காரியின் குழந்தைகளை மீட்ட வரலாற்றைச் சுருக்கி எழுதுக.

5. மருத்தன், திருத்தங்கி-இருவருடைய இயல்பையும் ஒளவையார் எவ்வாறு வெளிப்படுத்தினர்? விரித்து எழுதுக'

6. அமுத கவிராயரின் மனைவி பாடிய பாட்டுக்குக் நிலைக் களமான நிகழ்ச்சியை எழுதுக.

7. பகதூர் தொண்டைமானுக்கு அந்தப் பேர் வந்ததற்குக் காரணமான வரலாற்றை எழுதுக.

8. வாணராயர் வருத்தமடைய நேர்ந்த காரணத்தையும், புலவர்களுக்கு கலம் செய்ய அவர் செய்த செயலையும் விளக்குக.

9 புலியை நாடிய வள்ளலின் வரலாறு யாது?

10. புதுத்தாலி பெற்ற நங்கை யார்? புதுத்தாலி புனைந்த கதை என்ன?

11. வியத்தற்குரிய கொடை என்றது எதனை? விளக்குக.

12. குழந்தைக் கவிராயரின் சிறப்பைப் பற்றி எழுதுக.