பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கருத்தைப் பாராட்டினர்கள்; தாங்களும் அவனுடன் போருக்கு எழுவதாக உறுதி மொழியும் கூறினர்கள்.

அவர்கள் படைகளைச் சேர்த்தார்கள். போருக்கும் எழுந்தனர். நெடுஞ்செழியன் இளையவன்தான். ஆனாலும் வீரத்திற் சிறந்த பேரரசர் பரம்பரையிலே தோன்றியவன். குட்டியானாலும் பாம்பு பாம்பு தானே?

பகையரசர் கூடிப் பொர வருவதைக் கேள்வியுற்று அவன் சீறினான். "ஒகோ! இவர்கள் என்னை இளம் பிராயத்தை உடையவனென்று எண்ணி விட்டார்களோ? இவர்களே அடியோடு ஒழித்துவிடாமல் வேறு காரியம் பார்ப்பதில்லை” என்று உறுதி பூண்டான்.

ஒற்றன் ஒருவன் வந்தான்; “அரசே, சேர நாட்டிலும் மற்ற இடங்களிலும் இந்த நாட்டுப் பெருமை தெரியாமல் பலர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசனுடைய நாட்டின் பெருமையைப் பெரிதாக உயர்த்திக் கூறுபவர்களைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது. அதைக் கண்டு நாம் ஏமாந்து போக மாட்டோம். சின்னஞ் சிறு பிள்ளையாகிய அரசனுக்கு என்ன தெரியப் போகிறது என்று பேசிக்கொள்கிறார்கள்" என்றான்.

அரசன் சற்று மனம் உளைந்தான். "அவர்களுடைய படைகள் எத்தகையவை?" என்று ஒற்றனைக் கேட்டான்.

"யானை, தேர், குதிரை, வீரர் என்னும் நால் வகைப் படைகளையும் தொகுத்துக் கொண்டிருக்கிருறார்கள். சேர நாட்டு யானைகளை நானே பார்த்தேன்" என்றான் ஒற்றன்.

"இருக்கட்டும்; அதனால் என்ன? மணி ஒலிக்கும். பெரிய யானைகளும், தேரும், குதிரையும் படைக்கலங்களையுடைய மற்றவர்களும் இருக்கிறார்களென்று அவர்