பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

"அவர்கள் பெருமையே பெருமை! பாண்டி நாட்டின் பெருமை வேறு எந்த நாட்டுக்கு இருக்கிறது? மதுரை மாநகரின் சிறப்பை வேறு எங்கே பார்க்க முடியும்? பகையரசர் என்னதான் முயன்றாலும் இந்த நகருக்குள்ளே புக முடியுமா?” - ஆழமான அகழியையும் உயரமான மதில்களையும் பெரியோர்கள் அமைத்திருக்கிருர்கள். இத்தகைய வளம் பெற்ற பழைய நகரம் வேறு எங்கும் இல்லை என்பது உண்மை. இந்த நகரில் வாழ்ந்த அரசர்களெல்லாம் இம்மை மறுமைப் பயன்களைக் குறைவின்றிப் பெற்ற வர்கள்; வீரத்திலே சிறந்தவர்கள். அதனால் புகழைப் பெற்றவர்கள்.”

"அவர்கள் சென்ற நெறியிலே நானும் செல்ல வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.”

"அப்படியே ஆகட்டும். புண்ணியமும் வெற்றியும் புகழும் ஒருங்கே கிடைப்பதற்கு மூல காரணம் ஒன்று உண்டு. அதனை உடையவர்கள் மறுமையுலகத்துச் செல்வமும், பகை அரசரை வென்று நிற்கும் திறனும், நல்லிசையும் பெறுவார்கள்."

"படைப் பலத்தையா சொல்கிறீர்கள்?"

"அல்ல, அல்ல. யானை முதலிய படைகள் அல்ல; வேறொரு படை: உழுபடை. படைகளுக்கெல்லாம் உணவளிக்காவிட்டால் அவை போரிட முடியுமா? உடம்பிலே உயிர் தங்கி இருக்கும்படி செய்தாலல்லவா போரிட முடியும்?"

"நான் படை வீரர்களுக்கு வேண்டிய உணவைக் கொடுத்தேன். அவர்களுக்கு இனியும் குறைவின்றிக் கொடுக்கக் கட்டளை பிறப்பித்திருக்கிறேன்.” .

"நல்ல காரியந்தான். உண்டி கொடுத்தவரே உயிர் கொடுத்தவர் ஆகிறர்கள். உணவு இல்லா - -