உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

இசையைக் கேட்டு மகிழாத மன்னரோ, செல்வரோ தமிழ் நாட்டில் இல்லை யென்றே சொல்லிவிடலாம். அவன் நள்ளியை மாத்திரம் நெடுநாட்களாகப் பார்த்ததில்லை. வேறு பாணர் பலர் நள்ளியிடம் சென்று பாடிப் பரிசில் பெற்று வருவர். அவர்களே இந்தப் பாணன் சந்திக்கும்போது அவர்கள் நள்ளியின் இயல்பைப் பாராட்டிக் கூறுவார்கள். "நாங்களும் எவ்வளவோ இடங்களில் பாடுகிருேம், பரிசு பெறுகிருேம். தமிழ் நாட்டில் இசையை விரும்பிக் கேட்கும் வள்ளல்கள் பலர் இருக்கிருர்கள். ஆனல் நள்ளியின் திறமே வேறு. அவரும் மற்றவர்களைப் போலத்தானே பரிசு கொடுக் கிருர் என்று நீங்கள் கேட்கலாம். பரிசை நாம் பெறுவது பெரிதன்று. நம்முடைய ஆற்றலைத் தெரிந்து பாராட்டிக் கொடுக்கும் பரிசு ஆயிரமடங்கு உயர்ந்தது. இசைப் புலமையுடையவர்கள் சில சமயங்களில் மிகவும் அருமையாகப் பாடுவார்கள். அந்தச்சமயம் அறிந்து பாராட்டினுல் அந்தப் பாராட்டைவிடச் சிறந்த பரிசு வேறு இல்லை. எத்தனை நுட்பமான வகையிலே நம்முடைய இசைத் திறனைக் காட்டிலுைம் அந்த நுட்பத்தை உணர்ந்து, 'இந்த இடம் அருமையானது' என்று பாராட்டும் கலைஞர் நள்ளி. ஆகவேதான் அவரைக் காட்டிலும் நிலையிலும் பொருளிலும் சிறந்தவர்கள் தமிழ் நாட்டிலே இருந் தாலும், அவரையே அடிக்கடி நாடிச் சொல்லுகிறோம்" என்று அவர்கள் தங்கள் அநுபவத்தைச் சொல்வார்கள்.

இத்தகைய பேச்சைக் கேட்கக் கேட்க முன்னே சொன்ன பாணனுக்கு நள்ளியைப் பார்க்க வேண்டு மென்ற ஆவல் அதிகமாயிற்று. தன்னுடைய மாளுக்கர் கூட்டத்தோடும் சுற்றத்தோடும் நள்ளியை நாடிச் சென்றான.

இவன் போன சமயம் நள்ளி வேறு எங்கோ புறப்படும் நிலையில் இருந்தான். வந்தவர்களைப் போங்கள்