பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

எல்லாம் மக்கள் உங்களை வரவேற்று உபசரிப்பார்கள். பேரரசர்களிடம் உபசாரங்களைப் பெற்றிருப்பீர்கள். அந்த உபசாரங்களைவிடச் சிறப்பாகவா இங்கே கிடைக்கும்?" என்று நள்ளி கூறினன்.

"உங்கள் யாழிசையை அமைதியாக இருந்து நெடு நேரம் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அதற்குரிய வேளை வரவேண்டும். இங்கே என்னை நாடிச் சில அன்பர்கள் வருகிறார்கள். மிகவும் அவசியமான சில ஆலோசனைகள் நடத்த வேண்டும். அதனால் ஊருக்கு வந்தும் உங்கள் இசையை உடனே கேட்க முடியவில்லை. கேட்டோம் என்று பெயர் பண்ணுவதற்காகச் சிறிது நேரம் கேட்டுவிட்டுப் போவது எனக்கு விருப்பம் அன்று. வேறு அவசியமான வேலை உங்களுக்கு ஒன்றும் இராதென்று எண்ணுகிறேன். இங்கே தங்குவதிலும் உங்களுக்குத் தடை இருக்க நியாயமில்லை. உபசார வகையில் ஏதேனும் குறையிருந்தாலும் பொருட் படுத்தாமல் இங்கே இன்னும் சில நாட்களேனும் தங்கினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்" என்றும் சொன்னன்.

"தங்களுடைய திருவுள்ளப்படியே தங்களுக்கு எப்போது எங்கள் இசையைக் கேட்க முடியுமோ அப் போது கேட்கலாம். எங்களுக்கு இங்கே கிடைக்கும் உபசாரம் இதுதான் சொர்க்க போகமோ என்று நினைக்கும்படியாக இருக்கிறது. இவ்வளவு நாட்களாக இங்கே வராமற் போளுேமே என்று ஒவ்வொரு கணமும் நினைக்கிருேம்” என்று பாணன் விடை பகர்ந்தான்.

*

மேலும் ஒரு வாரம் பாணனுடைய பாட்டைக் கேட்கும் செவ்வி நள்ளிக்குக் கிடைக்கவில்லை. பாட்டைக் கேட்க வேண்டுமென்ற ஆசை நாளுக்கு நாள்