21
அவனுக்கு மிகுந்து வந்தது. கடைசியில் ஒரு நாள் மாலை பாணனும் அவனைச் சார்ந்தவர்களும் தங்கள் யாழை வாசித்தும் பாடியும் காட்டுவதற்கு ஏற்பாடு ஆயிற்று. வேறு ஊர்களிலிருந்து நள்ளியைக் காண்பதற்குச் சிலர் வந்திருந்தார்கள். புலவர்கள் சிலரும் வந்தார்கள். வன்பரணர் என்ற புலவர் பெருமானும் வந்திருந்தார். இத்தனை பேரும் இருக்கும்போது பாணனைப் பாடச் சொன்னால், அந்த இசையை யாவரும் அநுபவிக்கலாம். பாணனுக்கும் பெரு மகிழ்ச்சி உண்டாகும் என்ற எண்ணத்தால் அன்று இசையரங்கு நிகழும்படித் திட்டம் செய்தான்.
வந்திருந்த பாணன் நள்ளியின் முன் இதுகாறும் யாழை வாசிக்கவில்லை. ஆளுலும் ஒவ்வொரு நாளும் தனியே இருந்து யாழை வாசித்துக்கொண்டிருந்தான். இசையில் வல்லவர்கள் நாள் தவறாமல் இசைப் பயிற்சியை விடாமல் செய்து வந்தால்தான் இசைத் திறமை அவர்களிடம் நிலைத்து நிற்கும். அன்று காலையில் பாணன் நெடு நேரம் யாழை வாசித்துக்கொண்டிருந்தான். கலைஞர்கள் தம் கலையில் விளையும் இன்பத்தில் தாமே ஆழ்ந்து தம்மை மறந்துவிடுவார்கள். இந்தப் பாணன் அன்று காலையில் யாழை வாசித்தான்.
ஒவ்வொரு நேரத்துக்கும் இன்ன இன்ன பண் உரியதென்ற வரையறை உண்டு. காலை நேரத்துக்கு உரியது மருதப் பண். மாலை நேரத்தில் பாடுவதற்குரியது செவ்வழிப் பண். பாணன் மருதப் பண்ணை மிக விரிவாகப் பாடினன். அவன் இந்த உலகத்தையே மறந்து மருதப் பண்ணின் இசைக் கூறுகள் அலையலையாகப் பரவி மோத, அந்தக் கடலில் வேறு ஒன்றையும் காணுத நிலையில் ஈடுபட்டிருந்தான். யாழ் வாசிப்பதை நிறுத்தின. பிறகும் மருதப்பண். அவன் காதிலும் கருத்திலும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதனுடைய-