பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தங்களுடைய வள்ளன்மை இன்ப மயக்கத்தை உண்டு பண்ணி விடுகிறது. அதனால் என்றைக்காவது யாழை எடுத்து வாசித்தால் நேரமே தெரிவதில்லை; இன்ன நேரத்துக்கு இன்ன பண் என்ற முறையும் மறந்து போகிறது. மாலைக் காலத்தில் மருதம் வாசிக்கிறோம்; காலை நேரத்தில் செவ்வழிப் பண்ணை இசைக்கிறோம். இவ்வளவுக்கும் காரணம் தாங்கள் எங்களுக்குச் செய்யும் உபசாரந்தான். இது தவறாக இருந்தால், இதற்குக் காரணமாகிய தங்கள் வள்ளன்மையும் தவறாக முடியும்.”

புலவர் சொல்லி முடித்தவுடன் எல்லாரும் மகிழ்ச்சியினல் ஆரவாரம் செய்தார்கள். நள்ளியின் வள்ளன்மையைப் புகழ இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அப்போது அங்கே இருந்த களை இழந்த நிலையை அவர் மாற்றினரே என்று தமக்குள் வியந்தார்கள்.

"நான் தவறென்று சொல்லவில்லையே! காலைப் பண்ணை இப்போது பாடினரென்பதைப் பின்னாலே தான் உணர முடிந்தது. பாட்டு முடிகிற வரையில் நம்மையே மறந்து கேட்டோமே!" என்று நள்ளி புலவரை நோக்கிச் சொன்னன்.

பாணனுக்குச் சற்றே உணர்வு வந்தது. குனிந்த தலை நிமிர்ந்தது. அந்தச் சமயம் பார்த்து, "இப்போது பாணர் மாலைக்குரிய பண்ணைப் பாடப் போகிறார். மாலைப் பொழுதும் மாலைப் பண்ணும் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து இன்புறலாம்" என்று நள்ளி நயமாகச் சொன்னார்.

பாணன் புது முறுக்குடன் யாழை மீட்டிச் செவ்வழிப் பண்ணை இசைக்கத் தொடங்கினன்.

புலவர் நள்ளியிடம் சொன்னதை அவர் பாட் டாகவே பிறகு இயற்றிச் சொன்னர், -