பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அவனுடைய துணை யாருக்குக் கிடைக்கிறதோ அவனுக்கே வெற்றி என்றுதானே இன்று வரைக்கும் இருந்தது? மலையமான் இறந்துவிட்டான் என்ற செய்தி என் காதில் குளிர்ச்சியாக விழுந்தது.

ஒரு புலவர்:-அரசே, அப்படிச் சொல்லக்கூடாது. ஒரு பெருவீரனை நாம் பாராட்ட வேண்டியது அவசியம். அவன் இருக்கும்போது அவனை நாம் மனத்துக்குள் வியந்து கொண்டிருந்தோம். அதுதான் வீரர்களுக்கு அழகு.

வளவன்:-புலவரே, நீர் சொல்வீர். சண்டையில் கலந்து கொண்டு போர் செய்தவர்களுக்குத் தெரியும், அவனுடைய பயங்கரமான பலம். அப்பா வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டல்லவா போர் செய்ய வேண்டி யிருந்தது? இப்போது படைத்தலைவர்கள் நன்றாகத் தூங்குவார்கள். அவரவர்கள் தங்கள் தங்கள் படைப் பலத்தைக் காட்டி வெற்றிபெற முயல்வார்கள். இனி மலையமானால் தமிழ்நாட்டுக்கு அச்சம் இல்லை.

புலவர்:-மன்னர்பெருமானே, நான் சொல்வது தவறாக இருந்தாலும் சற்றுக் கேட்டருள வேண்டும். மெய்யான வீரம் யாரிடம் இருந்தாலும் அதைப் போற்ற வேண்டும். மலையமானைக் கண்டு அஞ்சினேன் என்று சொல்வது வீரமாகாது. அவன் இறந்த பிறகும் இருப்பவர் கூட்டத்தைச் சேர்ந்தவன். அவனைப் போன்ற வள்ளல்கள் சிலரே இந்த உலகத்தில் இருப்பார்கள். சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கு ஒப்பான புகழ் அவனுக்கு இருக்கிறது. அதன் காரணம் என்ன?

அரசன்:-காரணம் என்ன? அவர்கள் அவனிடம், நீ எங்களுக்குத் துணையாக வேண்டும் என்று சொல்லி