பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

கொண்டு அடிக்க வேண்டும். ஆகவே, அந்தக் குழந்தைகளையும் தகப்பன் போன இடத்துக்கே அனுப்பிவிட்டால்......?

மந்திரி:-(திடுக்கிட்டு) என்ன! மன்னர்பிரான் சொல்வது விளங்கவில்லையே! அந்தக் குழந்தைகளைக் கொல்ல......

அரசன்:-அதுதான் சொல்கிறேன். முள்மரத்தைச் சிறியதாக இருக்கும்போதே களைந்துவிட வேண்டும்.

மந்திரி:-(தடுமாற்றத்துடன்) உ.ல...க ம் பழிக்குமே!

அரசன்:-என்ன? உலகமா? தனி மனிதனுக்கு உரிய அறம் வேறு; அரசியல் அறம் வேறு. நாளைக்கு அவர்கள் பெரியவர்களாகிப் பலபேருடைய நாசத்துக்குக் காரணமான பிறகு அவர்களை அழிக்க முயல்வதைவிட இப்பொழுதே செய்துவிடுவது மேல். சரி. தக்க ஆட்களைக் கொண்டு அந்தச் சிறுவர்களைச் சிறை யெடுத்து வர ஏற்பாடு செய்யும். . . .”

மந்திரி:-(குழப்பத்துடன்) அரசே சிறிது யோசித்து.

அரசன்:-யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை. அந்த இரண்டு பாம்புக் குட்டிகளையும நசுக்கிவிட வேண்டும். இதில் யோசனை செய்வது முட்டாள்தனம். சிறுவர்களைக் கொண்டு வர வேண்டியதுதான். வேறு பேச்சு இல்லை. போம்.

காட்சி 2

இடம்:-அரண்மனையை அடுத்த பரந்த வெளி, பெருங் கூட்டத்தின் ஆரவாரம். தூரத்தில் களிறு ஒன்று பிளறிக்கொண்டு நிற்கிறது, சங்கிலியாற் கட்டப்பட்டு. மற்றெரு பக்கம்,மலையமான் குழந்தைகள் இருவரும் அழுதுகொண்டு நிற்கிறார்கள்.