பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

இந்த நாட்டில் இத்தகைய அதர்மச் செயல் நடப்பது நல்லதற்கு அல்ல. இதைப் பார்ப்பதைவிட நம் கண்களைப் பிடுங்கிக் கொண்டு விடலாம்.

(ஆரவாரம். கோவூர் கிழார் என்ற சத்தம்)

கூட்டத்தில் ஒருவர்: -புலவர் பிரான் கோவூர் கிழார் வரு கிருராம். அரசனுக்கு அறிவுரை கூற வருகிறார் போலும்! கடவுளே இவரை அனுப்பியிருக்கிறார்.

கோவூர் கிழார்:-(விரைவாக நடந்துகொண்டே) அரசன் எங்கே? குழந்தைகள் எங்கே? இன்னும் தண்டனையை நிறைவேற்ற வில்லையே?

உடன் வகுபவர்:-இல்லை இல்லை; நிறைவேற்றக் காத்து நிற்கிறார்கள். அரசன் அதோ அரண்மனையின் மேல்மாடத்திலிருந்து பார்த்துக்கொண்டு நிற்கிறான். கூட்டம் அதிகமாக இருக்கிறது. மக்களுடைய உள்ளக் கொதிப்பு மிகுதியாகி வருகிறது.

கோவூர் கிழார்:-அரசனிடம் நான் வருவதாகச் சொல்லி அனுப்புங்கள்; கூட்டத்தைச் சற்றே விலக்குங்கள்.

உடன் வருபவர்:-சற்று விலகுங்கள்; வழி விடுங்கள்.

(அரசன் கோவூர் கிழாரை வரவேற்க - எதிர்கொண்டு வருகிறான்.)

கோவூர் கிழார்:-கிள்ளிவளவன் புகழ் மங்காமல் ஓங்குக!

அரசன்:-என்ன, அப்படித் தங்களுக்கு மூச்சு வாங்குகிறதே உடல்நிலை சரியாக இல்லையோ?

கோவூர் கிழார்:-வேகமாக வந்தேன். நல்ல வேளை. சரியான சமயத்தில் வந்து சேர்ந்தேன். என் உடல் நிலை சரியாகவே இருக்கிறது. உள்ள நிலைதான் சரியாக இல்லை. தயை செய்து அரசர்பிரான் என் சிறு விண்ணப்பத்தைக் கேட்டருள வேண்டும். இப்-