பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46



சேதுபதி மன்னருடைய ஆதரவு அவளுக்கு எப்போதும் போல இருக்கிறது. ஆனாலும் அந்த ஆதரவு இரக்கத்தின் விளைவாக எழுந்ததுதானே? அவளுடைய கணவர் அமிர்த கவிராயர் வாழ்ந்த காலத்தில் அவள் பெற்ற இன்ப வாழ்வு என்ன இப்போது அவள் நிர்க்கதியாக நிற்கவில்லையே தவிர, நாள்தோறும். அமிர்த கவிராயருடைய அமுதக் கவியிலே உள்ளம்பறிகொடுத்த உற்சாகத்தில் சேதுபதி தந்த சம்மானங்களைப் பெற்று வாழ்ந்த வாழ்வு ஆகுமா? .

அந்தக் காலம் இனிமேல் வருமா? ஒரு துறைக் கோவையென்று புலவர் உலகத்தில் பேச்சு வந்தால் அது இரகுநாத சேதுபதியின் ஒரு துறைக் கோவையைத் தானே இன்றும் குறிக்கிறது? புலவர் ஆளுக்கோர் ஒரு 'துறைக்கோவை பாடினாலும் அதற்குச் சமானம் ஆகுமா?

அவள் நினைத்துப் பார்க்கிறாள். நூலை அரங்கேற்றிய போது நானுாறு பாட்டுக்கும், சேதுபதி மன்னர் நானூறு பொன் தேங்காயை உருட்டிவிட்டாரே! இதைக் கதையிலேகூடக் கேட்டதில்லையே! இடையே ஒரு பாட்டைச் சொல்லும்போது, "இதை நன்றாக உடைத்துப் பார்த்துச் சுவைக்க வேண்டும்; மற்றப் பாட்டுக்களைப் போல எண்ணக்கூடாது" என்று கவிராயர் சொன்னார். சுவையறியும் செம்மலாகிய அரசர் சொன்னதுதான் மிக மிக ஆச்சரியம். "தெரியும்; நமக்கு இதன் அருமை தெரியும் என்பதையும், இந்தப் பாட்டை உடைத்துப் பார்த்து இது மாணிக்கம் போன்ற பொருளை உடையதென்று உணர்ந்ததையும் இப்போது உருட்டிய தேங்காய் சொல்லும்; அதை உடைத்துப் பார்த்தால் தெரியும்” என்று. மன்னர் சொன்னர். தேங்காயை உடனே உடைத்துப் பார்த்தால், உள்ளெல்லாம் மாணிக்கக் கற்கள்! அந்த மாதிரி நிகழ்ச்சி உலகத்தில் சில காலங்களில்தான் நிகழக்கூடும்.