பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வாசலில் ஏடு


புலவர் நெடுந்தூரத்திலிருந்து வந்திருந்தார். வாணராயரைக் கண்டு அளவளாவ வேண்டுமென்றும், அவரால் தம்முடைய வறுமையைப் போக்கிக்கொள்ள வேண்டுமென்றும் எண்ணி வந்திருந்தார். அப்போது வாணராயர் எங்கோ வெளியூர் போயிருந்தார். வந்திருப்பவர் புலவர் என்பதை அறிந்து வீட்டில் உள்ளவர்கள் உபசரித்து வரவேற்றார்கள். வாணராயர் இன்னும் சில நாட்களில் வந்து விடுவாரென்றும், அதுவரையில் தங்கியிருக்கலாமென்றும் அவர்கள் சொன்னர்கள். புலவர் நாணம் உடையவராதலின், சும்மா பொழுது போக்கிக்கொண்டு முகம் அறியாதவர்களுக்கு இடையில் இருக்க விரும்பவில்லை. பின்பு வருகிறேன் என்று சொல்லிப் போய்விட்டார்.

வாணராயர் வெளியூருக்குப் போயிருந்தவர் திரும்பி வந்தார். புலவர் ஒருவர் வந்திருந்த செய்தியை உறவினர்கள் சொன்னார்கள்.

"அவர் எந்த ஊர்? என்ன பேர்?" என்று வினவினார் வாணராயர். அவர்கள் அவற்றைக் கேட்டுவைத்துக் கொள்ளவில்லை என்று சொன்னர்கள். அதனை அறிந்து மிக வருந்தினர் வாணராயர். 'வந்தவர் எவ்வளவு பெரிய புலவரோ! குறிப்பு அறிந்து ஈயும் கொடையாளிகளிடத் தான் தண்டமிழ்ப் புலவர்கள் செல்வார்கள். அவர் எப்படி மனம் வருந்திப் போபனாரோ?' என்று எண்ணி எண்ணி நைந்தார்.

"வந்தவர் புலவர் என்று அறிந்தும் நீ! சும்மா இருந்துவிட்டீர்களே" என்று வீட்டில் உள்ள-