பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வர்களைக் கடிந்துகொண்டார். அவர்கள் புலவரைத் தங்கியிருக்கும்படி சொன்னதைத் தெரிவித்தார்கள். 'நீங்கள் வற்புறுத்திச் சொன்னால் அவரை இருக்கும் படி செய்திருக்கலாம்” என்றார்.

இந்த நிகழ்ச்சி அவர் மனத்தைப் புண்படுத்தி விட்டது.

*

கொங்கு நாட்டில் வாழ்ந்திருந்த செல்வர்களில் வாணராயர் ஒருவர். அவர் பவளகுலம் என்னும் மரபில் வந்தவர். கோயம்புத்துார் மாவட்டத்தில் சமத்துர் என்னும் ஊரில் உள்ள குறுநில மன்னர்களுக்கு வாணராயர் என்னும் சிறப்புப் பெயர் இன்றும் இருந்து வருகிறது.

புலவரைக் கண்டு இன்புற இயலவில்லையே என்று வருந்திய வரணராயர் தம்மை நாடி வரும் புலவர்களிடம் பேரன்பு பூணும் இயல்புள்ளவர். அவர்களால் புகழ் அடையவர். அவர்களுடைய குறை இன்னதென்று அறிந்து அதனைப் போக்கும் இயல்புடையவர்.

பின்னும் ஒரு நாள் இந்த வாணராயர் வெளியூர் சென்றிருந்தபோது வேறு ஒரு புலவர் வந்தார். அவருடைய ஊர், பேர் முதலியவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள், வீட்டில் உள்ளவர்கள். அன்பாகப் பேசி, செல்வர் வந்துவிடுவார் என்று சொல்லி நிறுத்திவைத்தார்கள். புலவர் ஒரு நாள் தங்கினர். தம்முடைய தமிழ்ப் புலமைக்குப் பயனின்றி, யாருடனும் அளவளாவாமல் சோறு தின்று சும்மா இருப்பதை அவர் விரும்பவில்லை; "பின்பு ஒருமுறை வருகிறேன்" என்று கூறி விடை பெற்றுச் சென்றார்.

அப் புலவர் தொண்டை நாட்டிலிருந்து வந்தவர். தமிழுலகத்தில் அவருடைய பெயரை அறியாத-