பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

 யிட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணந்தான் முந்தியது.

நேரே அரண்மனையை அடைந்தார். நல்ல வேளையாக மருத பாண்டியர் வெளியூருக்குப் போகவில்லை. தாம் புலவரென்றும், மருத பாண்டியரை மிக அவசரமாகப் பார்க்க வேண்டுமென்றும் சொல்லியனுப்பினார். வரலாம் என்ற செய்தி கிடைத்தவுடன் உள்ளே போய் மருத பாண்டியர் முன் நின்றார். அவர், நீங்கள் யார்? எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?' என்று கேட்டார்.

புலவர் பேசவில்லை. அவர் மனத்தில் உருவாக்கி வைத்திருந்த ஒரு பாடலைச் சொன்னர். முதல்நாள் நிகழ்ச்சியைத் தெரிவிக்கும் பாடல் அது.

மருவிருக்கும் கூந்தல் மடவார் கணவன்
அருகிருக்கத் தாலி அறுமா?-இரவினுக்குன்
செங்கோல்செல் லாதா? இத் தேசம் திருடருக்குப்
பங்கா மருதபூ பா,
[மரு-மணம், மடவார்-பெண்கள்.]

இந்தப் பாட்டைப் புலவர் சொல்லும்போது முதலில் ஆத்திரத்தோடுதான் தொடங்கினர். ஆனல் அவர் என்ன அடக்கினாலும் அடங்காமல் அழுகையும் உடன் வந்துவிட்டது.

பாட்டைக் கேட்ட பாண்டியருக்குத் தூக்கி வாரிப் போட்டது. "உட்காருங்கள் புலவரே! என்ன நடந்தது? விளக்கமாகச் சொல்லுங்கள்" என்றார். ஏதோ கற்பனைப் பாட்டு அது என்ற எண்ணம் அவருக்கு உண்டாக வில்லை. புலவரிடம் பீரிட்ட துயரமும் அவருடைய மெய்ப்பாடுகளும் உண்மையை ஊகிப்பதற்கு உதவியாக இருந்தன.

புலவர் அப்படியே தொப்பென்று ஓர் ஆசனத்தில் விழுந்தார். அருகில் நின்றவர்கள் அவரைப் போய்ப்