85
கொண்டே திருக்கோயில் பிராகாரத்தில் வலமாக நடந்துகொண்டிருந்தார்கள்.
சமீன்தாரிணி புரளப் புரள ஆடை உடுத்துக் கொண்டிருந்தாள். சரிகை மினுமினுக்கும் பட்டாடை அவள் உடம்பில் தகதகத்தது. அவளுடைய நாத்தியின் மேனியில் சற்றே மெல்லிய ஆடை வண்ணமும் சித்திர வேலைப்பாடும் உடையதாக விளங்கியது.
அக்காலத்தில் அவர்கள் சென்றுகொண்டிருந்த பிராகாரம் தளவரிசை இல்லாமல் தரையாகவே இருந்தது. சாரல் இடைவிடாமல் வீசியமையால் அது ஈரமாகியிருந்தது. அந்த ஈரத்தில்தான் இரண்டு பெண்மணிகளும் நடந்துகொண்டிருந்தார்கள்.
பேச்சிலே மனம் ஈடுபட்டபடி வலம் வந்த அவர்களில் இளையவள் சமீன்தாரிணியைப் பார்த்து, "என்ன அண்ணி, இது? உன் புடைவையெல்லாம் மண்ணாகி விட்டதே!" என்றாள். தழையத் தழைய உடுத்திருந்த சீலையின் விளிம்பு பிராகாரத்தில் உள்ள மண் பட்டு அழுக்கேறியிருந்தது.
சமீன்தாரிணி தன் சிலையைப் பார்த்தாள்; "ஆமாம்; இவ்வளவு மண் ஆகிவிட்டதே!" என்றாள்.
"நீ உன் நிலைக்கு ஏற்றபடி புடைவையைப் புரளப் விட்டு நடக்கிறாய். எந்த இடத்தில் நடக்கிறோம் என்ற நினைவே உனக்கு இல்லை.”
"சரி என்ன பண்ணுவது? சீலை அழுக்காகுமென்று அஞ்சித் திருக்கோயிலை வலம் செய்யாமல் இருக்க முடியுமா? கால் தெரியும்படி சீலையைக் கையால் பிடித்துக்கொண்டு போவதற்கும் நாணமாகஇ ருக்கிறது.”
"மீசைக்கும் ஆசை, கூழுக்கும் ஆசையென்றால் முடியுமா? சீலை மண்ணாகாமல் இருக்க வேண்டுமானால் நாகரிகத்தையோ நம் நிலையையோ நாணத்தையோ